பலாத்காரம் : இரண்டாண்டுகளுக்கு பிறகு தொழிலாளி மீது வழக்கு
நாகர்கோவில்;கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஜூசில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது: தந்தை இறந்த நிலையில் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தேன். தாத்தா வீட்டு மாடியில் மண்டைக்காடு புதூர் கூலி தொழிலாளி ஜஸ்டாலிசன் ஜேம்ஸ் 43, வசித்தார். தாத்தா, பாட்டியின் வயது மூப்பு காரணமாக அவர்களுக்கு உதவி வந்த அவர், 17 வயதில் நான் குளித்துக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக அலைபேசியில் படம் எடுத்தார். பின் அதை காட்டி என்னை மிரட்டி மேல் மாடியிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று ஜூசில் மயக்க மருந்து கலந்து தந்தார். சிறிது நேரத்தில் மயங்கிய என்னை பலாத்காரம் செய்ததோடு அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் நான் யாரிடமும் இதை சொல்லாமல் இருந்து வந்தேன். சிறிது காலத்தில் ஜஸ்டாலிசன் ஜேம்ஸ் வீட்டை காலி செய்து விட்டு சென்னைக்கு சென்று விட்டார்.
கல்லூரியில் படித்து வரும் நான் சமூக வலைதளங்களில் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கண்டு தற்போது புகார் செய்கிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
ஜஸ்டாலிசன் ஜேம்ஸ் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்ய சென்னைக்கும் சென்றுள்ளனர்.
மேலும்
-
அதிருப்தியால் த.வெ.க., தாவும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
-
விஜய் ஒரு நடிகர் தான்!
-
ஆட்டிசம் பாதிப்பால் தடையில் லை
-
விபத்தில் ஒரு காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத முதியவர்
-
'விஜய்க்கு கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறாது': முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
-
வெளிநாடு சென்று குப்பை சேகரிப்பாளர்களை ஊக்குவிக்கும் கிருஷ்ணா