கால்பந்து: இந்திய அணி 'டிரா'

1

மாலி: இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய தெற்காசிய கால்பந்து லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
தெற்காசிய கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோருக்கான) ஆண்களுக்கான தொடர் மாலத்தீவில் நடக்கிறது. இந்தியா, வங்கதேசம் உட்பட 7 அணிகள் இரு பிரிவுகளாக மோதுகின்றன. நேற்று மாலியில் நடந்த 'பி' பிரிவு கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின.
17 வது நிமிடம் இந்தியாவுக்கு 'கார்னர் கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதில் ஓமங் டோடும் அடித்த பந்தை, இந்தியாவின் விஷால் யாதவ், அந்தரத்தில் குதித்து, தலையால் முட்டி கோலாக மாற்றினார். முதல் பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+8 வது நிமிடம்) கிடைத்த 'கார்னர் கிக்' வாய்ப்பில் வங்கதேச தரப்பில் ஒரு கோல் அடித்தனர். முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
பூடானுடன் மோதல்
இதையடுத்து இந்திய அணி 2 போட்டியில் தலா ஒரு வெற்றி, 'டிரா' செய்து, 4 புள்ளி பெற்று, பட்டியலில் முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் 'ஏ' பிரிவில் 2வது இடம் பெற்ற பூடானை (3ல் தலா ஒரு வெற்றி, 'டிரா' தோல்வி). அரையிறுதியில் (ஏப். 1) சந்திக்க உள்ளது.

Advertisement