ராஜபாளையத்தில் யார் போட்டி ஜான்பாண்டியன் ஓட்டெடுப்பு
திருநெல்வேலி: ராஜபாளையம் தொகுதியில் யார் போட்டியிடுவது என ஜான்பாண்டியன் குடும்பத்தினரிடையே ஓட்டெடுப்பு நடந்தது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டசபை தொகுதி தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக நேற்று திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் ஆலோசனை நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜான் பாண்டியன் ,அவரது மனைவி வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் மகன் டாக்டர் வியங்கோ பாண்டியன் இவர்களில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என ஓட்டெடுப்பு நடந்தது. கட்சி நிர்வாகிகள் ஓட்டெடுப்பில் பங்கேற்றனர் இருப்பினும் நேற்று முடிவு அறிவிக்கப்படவில்லை.
யார் வேட்பாளர் என்பதை இன்று அறிவிப்பதாக ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
Advertisement
Advertisement