பார்லிமென்டில் 'டி - ஷர்ட்' அணியலாமா?
புதுடில்லி: பா. ஜ., செய்தித் தொடர்பாளராக இருப்பவர், ஜெயவீர் ஷேர்கில். இவர், காங்கிரசிலிருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர். சமீபத்தில் இவர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு, டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், காங்கிரசில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
'பார்லிமென்ட், ஜனநாயகத்தின் கோவில் என அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த கோவிலில் சிலர், 'டி ஷர்ட், கார்கோ பேன்ட்' அணிந்து வருகின்றனர். இந்த உடைகளை தடை செய்ய வேண்டும்' என பதிவிட்டிருந்தார் ஷேர்கில்.
அவர், ராகுல் பெயரை குறிப்பிடாவிட்டாலும், ஷேர்கில் அவரை தான் குறிவைத்துள்ளார் என்பது, அனைவருக்குமே தெரியும். ஷேர்கில் கூறியது போல, டி - ஷர்ட் மற்றும் கார்கோ பேன்டில் தான், அதிக சமயங்களில் பார்லிமென்டிற்கு வருகிறார் ராகுல். உடனே, 'பார்லி., மற்றும் சட்டசபைகளில் டி -- ஷர்ட் அணியலாமா, கூடாதா?' என, டில்லி 'டிவி' சேனல்களில் விவாதங்கள் துவங்கி விட்டன.
'சமையல் எரிவாயு தட்டுப்பாடு, சர்வதேச பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவே, பா.ஜ., இப்படி சொல்லியுள்ளது' என, காங்., தெரிவிக்க, அதற்கு பா.ஜ., மீண்டும் பதிலடி கொடுத்தது. ராகுல் பார்லி.,க்கு வரும் போது டி - ஷர்ட் அணியக்கூடாது என, காங்., மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால், நேரடியாக அவரிடம் இதை கூற தயங்குகின்றனராம்.
'தமிழகத்திலும், டி - ஷர்ட் அணிந்து தான் சட்டசபைக்கு உதயநிதி வருகிறார். 2019ல், தமிழக அரசு ஆடை கட்டுப்பாடு தொடர்பாக ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிராக உதயநிதி செயல்படுகிறார்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
அரசு அதிகாரிகளை டி ஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அலுவலகம் வருவது வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அதுபோல சட்டசபை பார்லிமென்ட் ல் பார்மல் டிரஸ் அணிவது அவர்கள் வகிக்கும் பதவிக்கு அழகு
இவரெல்லாம் ஒரு தலைவர்
எப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட சபைக்குள் டீ சர்ட் அணிவது சர்ச்சைக்குரிய ஒன்றோ அதே போலத்தான் மண்டைக்கு மேலே சிலர் கொண்டை அணிவதும்.
பள்ளி, கல்லூரிகளில் டீ சர்ட் அணிந்து வகுப்பிற்கு மாணவர்கள் செல்ல முடியுமா? இல்லை ஆசிரியர், பேராசிரியர்கள் டீசர்ட் அணிந்து வகுப்பெடுக்க முடியுமா? அது பள்ளி, கல்லூரிக்கு ஏற்ற நாகரிக உடை அல்ல என்றுதானே அதனைத் தவிர்க்கிறோம். இதே நடைமுறை தானே அப்ப நாடாளு மன்றம் சட்டமன்றத்திற்கும் பொருந்தும்? இவர்கள் டீசர்ட் அணிந்து நாடாளுமன்ற, சட்டமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனுக்கு செல்லட்டும். அது தவறில்லை. ஆனால் சபைக்குள் டீ சர்ட் அணிந்து வருவது தவறு தான்.
டிரஸ் கோடு முக்கியமான முக்கியம். கல்யாணம் என்றால் வேட்டி பட்டு புடவை என்று போகிறோம். வடநாடு அவர்களுடைய உடை. அதேபோல் அலுவலகம் மீட்டிங்கில் பார்மல் டிரஸ். அதேபோல் கோவிலுக்கு சென்றால் விளையாட சென்றால் அதன் உடை. ஏன் பாராளுமன்றத்திலும் கூடாது.
ஷர்ட் அணிந்து வந்ததே மரியாதைதான்... யோக்கியமாக நாட்டுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதை சொல்லி இருக்கலாம்.
பாராளுமன்றத்துக்கு மாட்டுவண்டியில் வந்தவர்களும் உண்டு, கவனத்துடன் வந்தவர்களும் உண்டு,
Already we are wasting so much of money on them. Why waste further
பேசாமல் இனி பாராளுமன்ற எல்லா எம்.பி. க்களுக்கும் மாநில சட்ட மன்ற எம்.எல்.ஏ.க்கள் உறுப்பினர்களுக்கும் இனி ஒருவிதமான ஆடைகளை அரசின் செலவிலேயே அளிப்பது சிறந்ததாகும் அதே போன்று பெண்களுக்கும் தகுந்த நிறத்தோடு அவர்களுக்கு பிடிக்கும் ஆடைகளையும் அணிந்து உள்ளே வரவேண்டும் அரசின் செலவில் எல்லாருக்கும் அளித்துவிட்டால் இந்த பிரச்சனையே இருக்காது எல்லோரும் அந்த அந்த ஆடைகளைத்தானே போட்டுக்கொண்டு சட்ட சபைக்கும் நுழைய அனுமதிக்க வேண்டும் அப்போதுதான் ஒருமதிப்பு இருக்கும்மேலும்
-
புவிசார் காகித கூழ் பொம்மைகள் மூலம் 100 சதவீத ஓட்டு பதிவு விழிப்புணர்வு
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி