அமைச்சர் கயல்விழிக்கு 'கல்தா'; தி.மு.க.,வில் அதிர்ச்சி

தாராபுரம், கடந்த, 2021 தேர்தலில், தாராபுரம் (தனி) தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், அப்போதைய தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, தி.மு.க.,வில் புதுமுகமாக களமிறங்கியவர் கயல்விழி.

தேர்தலில், 1,392 வாக்குகள் வித்தியாசத்தில் முருகனை வென்றார். அதற்கு பரிசாக, அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. மனிதவள மேலாண்மை துறை அமைச்சராக, உள்ளார். தாராபுரம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது, அரசு கலைக் கல்லுாரி அமைத்தது இவர் செய்த குறிப்பிடத்தக்க பணிகள்.


எந்த சர்ச்சைகளிலும் சிக்காததால், மீண்டும் கயல்விழிக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று, தாராபுரம் திமுகவினர் மத்தியில் நம்பிக்கை இருந்தது. நேற்று வெளியான பட்டியலில், டாக்டர் இந்திராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது தாராபுரம் தி.மு.க.,வினர் மட்டுமின்றி பிற கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாய்ப்பு பறிபோக காரணம்கயல்விழியின் கணவர் வழக்கறிஞர் செல்வராஜ். திருப்பூர் மாவட்ட தி.மு.க., வழக்கறிஞரணியில் உள்ளார். கட்சி வார்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இவரை சகஜமாக அணுகி, தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது என்பது, சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியே, கயல்விழிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதை தடுத்து விட்டது என்பது, கட்சியினர்
மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

Advertisement