கொரியர் வழியாக ஏற்றுமதி ஏப்., 1 முதல் உச்சவரம்பு நீக்கம்

புதுடில்லி:ஒரே கொரியர் பார்சலில், 10 லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்யலாம் என்ற உச்சவரம்பை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால், சிறிய வணிகர்கள் அதிகம் பலனடைவார்கள் என வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் கூறியதாவது:

மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, வெளிநாட்டுக்கு கொரியரில் அனுப்பும் பொருட்களின் அதிகபட்ச மதிப்பு 10 லட்சம் ரூபாய் வரை என்ற உச்சவரம்பு, ஏப்., 1ம் தேதி முதல் முற்றிலும் நீக்கப்படும்.

இப்போது சிறு நிறுவனங்கள், வணிகர்கள் 10 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை பல பார்சல்களாக பிரித்து அனுப்பி வருகின்றனர். சில நேரங்களில், அதிக ஆவணங்கள், கூடுதல் செலவு செய்து 'கார்கோ' சேவையை பயன்படுத்துகின்றனர்.

இனி இந்த அதிக செலவு தரும் நடைமுறை தேவையின்றி, நேரமும்,பணமும் மிச்சமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement