தொண்டர்களை மதிக்கத் தெரியாதவருக்கு 'சீட்' ராணிப்பேட்டை தி.மு.க.,வில் கொந்தளிப்பு
ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட தனது மகனுக்கு காந்தி சீட் வாங்கி கொடுத்ததால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். தொண்டர்களை மதிக்க தெரியாத வினோத்திற்கு சீட் தருவதா என கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
மகனுக்கு வாய்ப்பு
சட்டசபை தேர்தலில் தி.மு.க.,சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில்
ராணப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதே தொகுதியில் அவரது மகன் வினோத் காந்திக்கு தி.மு.க., தலைமை வாயப்பு வழங்கி உள்ளது.
வினோத் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்காத நிலையில், அவருக்கு கட்சி தலைமை சீட் ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சி தொண்டர்களையே மதிக்கத் தெரியாத நபருக்கு எம்.எல்.ஏ., சீட் எப்படி வழங்க முடியும் என புலம்பி வருகின்றனர் தி.மு.க.,வினர்.
இது ராணிப்பேட்டை தி.மு.க., நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
தி.மு.க.,வின் வேலுார் மாவட்ட செயலராக இருந்த ஆர்.காந்தி, வேலுார் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டபோது ராணிப்பேட்டை மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டார். ஆறு முறை
அடிக்கடி தகராறு
ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அவர் இதுவரை நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதும், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.பி., டி.ஆர்.பாலு போல தாங்கள் களத்தில் 'ஆக்டிவாக' இருக்கும்போதே அரசியலில் எனக்கு பதவி மற்றும் பொறுப்புகளை வாங்கி தரும்படி காந்தியிடம் கேட்டு வினோத் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
அதன்படி, கடந்த லோக்சபா தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் வினோத்துக்கு கிடைக்கவில்லை. எப்படியோ கட்சி தலைமையிடம் பேசி காந்தி தன் மகனுக்கு எம்.எல்.ஏ., சீட் வாங்கி தந்துவிட்டார்.
ராணிப்பேட்டையின் வெற்றியை மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த முஸ்லீம்கள் தான் தீர்மானிக்கின்றனர். இதனால் தான் பா.ஜ.,சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் வாயிலாக சிறுபான்மை ஓட்டுக்களை கவர பா.ஜ., முயன்றும் பலனளிக்கவில்லை.
தற்போது, த.மா.க., வேட்பாளர் கார்த்திகேயன் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் வினோத் வெற்றி பெறும் நிலை உள்ளது. ஆனால், கட்சி தொண்டர்களை மதிக்க தெரியாதவருக்கு எப்படி தலைமை சீட் வழங்கியது என தெரியவில்லை.
கட்சி நிர்வாகிகளையோ, தொண்டர்களையோ அனுசரித்து செல்ல தெரியாத ஒருவர் வெற்றி பெற்றால், அந்த தொகுதி மக்கள் அவரிடம் எப்படி கோரிக்கை வைத்து திட்டங்களை பெறுவது என தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஓசூர், ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்
-
என்னுடன் நடை போட்டிக்கு தயாரா? பழனிசாமிக்கு துரைமுருகன் சவால்
-
தர்மம் வெல்ல பா.ஜ.,வுக்கு ஓட்டு
-
செந்தில் பாலாஜிக்கு மாற்றாக தம்பி அசோக்குமார் வேட்பு மனு
-
எப்போதும் 'கேட்ச்'ஐ விடும் பா.ஜ.,
-
நாடு முழுதும் 'நீட்' தேர்வுக்கு 26 லட்சம் பேர் விண்ணப்பம்