'கொடை' யில் மின்னணு கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
கொடைக்கானல்: கொடைக்கானலில் பயனற்ற மின்னணு கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 5 இடங்களில் மின்னணு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.அப்போதைய கலெக்டர் வினய் இதற்கான முயற்சியை முன்னெடுத்தார். தொடர்ந்து கழிப்பறைகள் அமைக்கப்பட்ட சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டன.
5 ஆண்டுகளுக்கு மேலாக பயனற்ற நிலையில் இருந்தது. தற்போது இவை தொழில்நுட்ப கோளாறால் இயங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது கேரளம் மாநிலத்தை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் மின்னணு கழிப்பறை தொழில்நுட்ப கோளாறுகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் ,'' செயல்படாத மின்னணு கழிப்பறைகளை கட்டணமின்றி இலவசமாக பயன்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப நடைமுறைகளை மாற்றும் பணி நடந்து வருகின்றன. இவை ஓரிரு தினங்களில் பயன்பாட்டிற்கு வரும் ''என்றார்.