குப்பையால் தாண்டிக்குடியில் மின்விபத்து அபாயம்

தாண்டிக்குடி: தாண்டிக்குடியில் மின் டிரான்ஸ்பார்மர் பகுதியில் குவிக்கப்படும் குப்பையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாண்டிக்குடி முழுமையும் மின் சப்ளை அளிக்கப்படும் டிரான்ஸ்பார்மர் கீழ் பஸ் ஸ்டாப் பகுதியில் அமைந்துள்ளது.

இதனருகே உதவி மின் பொறியாளர் அலுவலகமும் செயல்படுகிறது.இப்பகுதி குடியிருப்போர் குப்பையை டிரான்ஸ்பார்மர் இடத்தில் குவிக்கும் போக்கு உள்ளது.இதனிடையே அவ்வப்போது இப்பகுதியில் உள்ளோர் குப்பைக்கு தீ வைப்பதால் டிரான்ஸ்பார்மர் மின்விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

மின்வாரியத்தினரும் டிரான்ஸ்பார்மரை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்படாமல் வெறுமனே விட்டுள்ளனர்.

ஊராட்சி குப்பை முறையாக அள்ளப்படாத நிலை, அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பயணிகள் முகம் சுளிக்கும் போக்கு என சுகாதாரக்கேடாக உள்ளது.

ஊராட்சி, மின்வாரியத்தினர் இப்பகுதியில் குப்பை குவிப்பதை தவிர்த்து துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement