4 எம்.எல்.ஏ.,க்களை பழி தீர்த்த அமைச்சர்: தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் 'கல்தா'
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தன்னை எதிர்த்த நான்கு எம்.எல்.ஏ.,க்களுக்கு, தி.மு.க.,வில் 'சீட்' கிடைக்க விடாமல் அமைச்சர் நேரு தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் ஒன்பது சட்டசபை தொகுதிகளிலும், கடந்த 2021 தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது; நேரு, மகேஷ் அமைச்சர்களாகினர். இந்நிலையில், லால்குடி - சவுந்தரபாண்டியன், துறையூர் - ஸ்டாலின் குமார், முசிறி - தியாகராஜன், ஸ்ரீரங்கம் - பழனியாண்டி ஆகிய நான்கு எம்.எல்.ஏ.,க்களும், 'எங்கள் தொகுதி பணிகளின் ஒப்பந்தங்களை கூட, அமைச்சர் நேருவே முடிவு செய்கிறார்.
எங்களை மதிப்பதில்லை' என கூறியதோடு , முதல்வர் ஸ்டாலினிடமும் புகார் அளித்தனர். பின், தியாகராஜன், ஸ்டாலின் குமார் ஆகியோர் அமைதியாக இருந்தாலும், பழனியாண்டி, சவுந்தரபாண்டியன் ஆகிய இருவரும், அமைச்சர் நேரு குறித்து வெளிப் படையாகவே விமர்சனங்களை கூறி வந்தனர். இது, நேருவை தர்மசங்கடப்படுத்தினாலும், அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில், நேற்று வெளியான தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், முசிறி - தியாகராஜன், ஸ்ரீரங்கம் - பழனியாண்டி, லால்குடி - சவுந்தரபாண்டியன் ஆகிய மூவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை; அத்தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் துறையூர் தொகுதியை, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கி விட்டதால், அத்தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமாருக்கும் வாய்ப்பு பறிபோனது.
இதன் வாயிலாக, தன்னை எதிர்த்த நான்கு எம்.எல்.ஏ.,க்களுக்கும் சீட் கிடைக்க விடாமல் நேரு தடுத்து விட்டதாக, அந்த எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
வாசகர் கருத்து (10)
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
29 மார்,2026 - 14:55 Report Abuse
தமிழா உன்னை சுரண்டி கொள்ளை அடிக்கும் இந்த திருட்டு திராவிடனை தோற்கடிப்போம் தமிழா... 0
0
Reply
Arul Narayanan - Hyderabad,இந்தியா
29 மார்,2026 - 12:58 Report Abuse
உள்ளாட்சி அமைப்புகளில் பணியிடங்கள் நிரப்ப வாங்கிய ஆயிரக்கணக்கான கோடி லஞ்சப் பணம் நன்றாகவே வேலை செய்கிறது. 0
0
Reply
சந்திரன் - ,
29 மார்,2026 - 12:49 Report Abuse
வேறென்ன இனி இந்த தொகுதிகளில் உள்ளடி வேலை செய்து பழி தீர்ப்பாங்க 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
29 மார்,2026 - 11:41 Report Abuse
சிற்றரசரிடம் மோதிய ஜமீன்கள் நிலைமை காலி . இனிமே உள்குத்து வேலை ஆரம்பம். 0
0
Reply
xyzabc - ,இந்தியா
29 மார்,2026 - 11:15 Report Abuse
ஜாக்கிரதாயக இருப்பது நல்லது. 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
29 மார்,2026 - 10:43 Report Abuse
பள்ளம் தோண்டும் காரியம் இனி எதிர் பார்க்கலாம். 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
29 மார்,2026 - 08:26 Report Abuse
இதனால் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே கூட ஒரு பயனும் இல்லை. 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
29 மார்,2026 - 08:06 Report Abuse
சபாஷ் சரியான போட்டி. இதை அதிமுக எப்படி பயன் படுத்திக் கொள்வது என்பதை யோசிக்க வேண்டும். 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
29 மார்,2026 - 07:27 Report Abuse
இருந்தால் கிழித்து தொங்கவிடவேண்டும். 0
0
Reply
aru - ,இந்தியா
29 மார்,2026 - 07:07 Report Abuse
அவங்க இவங்களை தோற்கடிப்பாங்க, இதுதான் திராவிட மாடல், வாக்களித்த மக்கள் 200 வாங்கிக்கிட்டு போக வேண்டியதான்..... 0
0
Reply
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
Advertisement
Advertisement