ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அவசியம்
திருப்போரூர்: திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் செயல்படுகிறது.
இந்த அலுவலகத்தின் கீழ், திருப்போரூர் ஒன்றியத்தில், 163 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், திட்ட அலுவலர், கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர், அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் என 200 க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில், 98 சதவீதம் பெண்பணியாளர்களே பணிபுரிகின்றனர்.
அங்கன்வாடிகள் மூலம் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரம் போன்ற சேவை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ஊழியர்களின் மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் அனைத்து பண பலன்களும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் கடந்த 1986 அமைக்கப்பட்டது. இந்த கட்டடம் சேதமடைந்ததால், பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள பழைய வேளாண் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
இங்கு, அங்கன்வாடி பணியாளர்களுக்கான மாதாந்திர கூட்டம் நடத்துவதிலும், ஊட்டசத்து பொருட்களை சேகரித்து வழங்குவதிலும் போதிய இடவசதிகள் இல்லை.
அதேபோல், கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை; கட்டடத்தின் பின்புறத்தில் குப்பை கழிவுகளுடன் கிடக்கிறது.
எனவே, திருப்போரூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித திட்ட அலுவலகத்திற்கு போதிய அடிப்படை வசதிகளுடன் விசாலமான புதிய கட்டடத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதுவரை தற்போது உள்ள கட்டடத்தில் கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு