ஓட்டுப்பதிவு பயிற்சி 256 பேர் 'ஆப்சன்ட்'

செங்கல்பட்டு: மார்ச் 29-: திருப்போரூர் ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பயிற்சியில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

இத்தொகுதியின் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம், பையனுார், ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லுாரியில், நேற்று நடந்தது.

தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர் 513 பேர், முதலாம் ஓட்டுப்பதிவு அலுவலர் 955 பேர், இரண்டாம் ஓட்டுப்பதிவு அலுவலர் 573 பேர், மூன்றாம் ஓட்டுப்பதிவு அலுவலர் 559 பேர் என, 2 ஆயிரத்து 600 பேர், பயிற்சிக்கு நியமிக்கப்பட்டனர்.

பயிற்சியில் அனைவரும் பங்கேற்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தினர். 2 ஆயிரத்து 344 பேர் பங் கேற்றதில், 256 பேர் பங்கேற்காததாக, பயிற்சி வருகை பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பயிற்சி வகுப்பில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு மதிய உணவு முறையாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பலருக்கு மதிய உணவு கிடைக்காமல் உடல் சோர்வால் அவதிபட்டனர்.

Advertisement