அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பழகன் பேரனுக்கு, இம்முறை 'சீட்' மறுக்கப்பட்டுள்ளது தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க., பொதுச்செயலராகவும், கல்வி, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் இருந்தவர் அன்பழகன். கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகவும் இருந்தவர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பின், தேர்தல் போட்டியில் இருந்து அன்பழகன் ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்பழகன் மறைவிற்கு பின், கடந்த 2021 சட்டசபை தேர்தலில், வில்லிவாக்கம் தொகுதியில் அவரது பேரன் வெற்றியழகன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
அ.தி.மு.க., வேட்பாளர் ஜே.சி.டி., பிரபாகரை, 37,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஐந்து ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், பெரிதாக கட்சி பணிகளில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட, அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க.,வில் அமைச்சர், முக்கிய நிர்வாகிகள் மகன்களுக்கு 'சீட்' வழங்கப்பட்டு உள்ளது. அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன் மகன் கார்த்திக்கிற்கு, வில்லி வாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், வெற்றியழகனுக்கு 'சீட்' வழங்காதது, அன்பழகன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்று மட்டும் நிச்சயம். திராவிட கட்சியினரின் கல்வித்தகுதி மற்றும் வாங்கிய பட்டங்களை சரிபார்க்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
அன்பழகனையெல்லாம் பேராசிரியர் என்று ஒப்புக்கொண்டால் ... கூட என்னை மதிக்க மாட்டார் ..... சொன்னது கருணாநிதி ....
அன்பழகன் உயிருடன் இருந்தபோது அவருக்கே மதிப்பு இருந்தது இல்லை. அவர் மந்திரியாக இருக்க ஸ்டாலின் துணை முதல்வர் ஆனார்!
அன்பழகன் திமுக மூத்த தலைவர். அண்ணா இருக்கும் போது நாவலரும் பேராசிரியர் அவர்களுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதை மிக பெரியது .கருணாநிதி சூழ்ச்சியால் கட்சியை கைப்பற்றினார் .அதன் தீமை இன்று வரை தொடர்கிறது
ஆடி உதயநிதி காற்றில் அம்மியே துறைமுருகன் பர்க்குது. இலவம் பஞ்ஜெ பற்றி பேசுறீங்க. இதிலிருந்து தெரிய வில்லையா குடும்ப ஆட்சியில் பட்டத்து இளவரசர் வைத்தது தான் சட்டம்.
அன்பழகனே உப்புக்கு சப்பாணி.
பேராசிரியர் அவர்கள் இப்போது இருந்தால் அவர்கள்கே சீட் ஒதுக்கி இருக்க மாட்டார்கள். இப்போது பண பலம் அவசியம்.
அன்பழகனுக்கெல்லாம் ஆதரவாளர்கள்? அவரே சிரிப்பார்.
அன்பழகன் தான் உண்மையான திமுக வாரிசு அது தெரியமா? இப்போ அவர் பேரனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மறுத்ததற்கு காரணமும் வருங்காலத்தில் தன குடும்பத்தை விட்டு கட்சி போய்விட கூடாது என்பதால் தான்.
அவர் என்ன மஞ்சள் அரைக்கவா செய்தார்... 30000 கோடியா கொடுத்தார்... அல்லது 3000 கோடியாவது கொடுத்தாரா... அது கூட இல்லை என்றால் வெறும் மூன்று கொடியாவது கொடுத்தார்களா?
அன்பழகனின் பேரனுக்கு இந்த முறை வாய்ப்பில்லை ஆனால் கருணாநிதியின் பேரனுக்கு மட்டும் எப்போதுமே வாய்ப்பு உடு இது ஜன நாயகமா அல்லது குடும்ப வாரிசு நாயகமா தமிழர்களே தெரிந்துகொள்ளுங்கள்மேலும்
-
புவிசார் காகித கூழ் பொம்மைகள் மூலம் 100 சதவீத ஓட்டு பதிவு விழிப்புணர்வு
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி