ராம்குமாருக்கு 'மானுட ஐகான்' விருது
கோவை: எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை சி.இ.ஓ., ராம்குமாருக்கு, ரோட்டரி கிளப் ஆப் சாய்சிட்டி மற்றும் ரோட்டரி மாவட்டம் 3206 சார்பில், 'மானுட ஐகான்' விருது வழங்கப்பட்டது.
ரோட்டரி மாவட்ட கவர்னர் ராகவேந்தர் விருது வழங்கினார். ராம்குமாரின் 'கிப்ட் ஆப் லைப்' திட்டத்தில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பாராட்டி கவுரவிக்கும் விதத்தில் இவ்விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சாய்சிட்டி இணைந்து, பிறவியிலேயே இதய குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இலவச இதய அறுவைச் சிகிச்சை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
விருதை, நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணனுக்கு சமர்ப்பிப்பதாக, ராம்குமார் தெரிவித்தார்.
ரோட்டரி கிளப் ஆப் கோவை சாய்சிட்டி தலைவர் ஹால்தொரை, துணை நிர்வாக அறங்காவலர் நாரேந்திரன், மருத்துவ இயக்குநர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.