7 தொகுதிகளுக்கான த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளுக்கான த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியானது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளர்களின் பெயர், தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பா.ம.க., - வி.சி., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாத நிலையில் நேற்று த.வெ.க., வேட்பாளர் போட்டியிடும் தொகுதி, பெயர் பட்டியல் வெளியானது.

அதன்படி விழுப்புரம் சட்டசபை தொகுதியில், மாவட்ட செயலாளர் மோகன் போட்டியிடுகிறார்.

மேலும், விக்கிரவாண்டி வடிவேல், மயிலம் நிரஞ்சன், செஞ்சி சந்திரசேகரன், திண்டிவனம் (தனி) சக்திவேல், வானுார் (தனி) சுரேஷ், திருக்கோவிலுார் பரணிபாலாஜி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். த.வெ.க., முதல் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிகப்படியாக மாவட்ட செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் செஞ்சியை தவிர்த்து மற்ற ஆறு தொகுதிகளில் மாவட்ட செயலாளர்கள் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர்.

Advertisement