த.வெ.க.,வில் 'விசில்' அடித்த சோழவந்தான் மாஜி எம்.எல்.ஏ.,: செங்கோட்டையன் மூலம் கிடைத்தது 'சீட்'
அலங்காநல்லுார்: மதுரை சோழவந்தான் (தனி) தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., வாய்ப்பு வழங்காததால், அதிருப்தியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பையா த.வெ.க.,வில் இணைந்த உடனே செங்கோட்டையன் மூலம் 'சீட்' பெற்றுள்ளார்.
அலங்காநல்லுார் அருகே வாவிடமருதுாரைச் சேர்ந்தவர் எம்.வீ.கருப்பையா 61, இவர் 1980 முதல் அ.தி.மு.க., உறுப்பினர், 1988ல் ஜெ அணி, 2002ல் மீனவரணி ஒன்றிய செயலாளர் என பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். கட்சிப் பணி ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் முன்னணியில் ஈடுபட்டு, காயமடைந்துள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று கிணற்றுக்குள் 'ஜல பிரதட்சணம்' (தண்ணீரில் மிதப்பது) செய்து, அவரின் கவனத்தை ஈர்த்தவர். 2011ல் சசிகலா மூலம் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்று 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ம.க.,வை வித்தியாசத்தில் வென்றவர். 2016- 2021ல் வாய்ப்பு கிடைக்்காததால் 2026ல் பெற்றுவிடலாம் என அதிக நம்பிக்கையில் இருந்தார்.
மக்கள் ஆதரவுடன், தான் சார்ந்துள்ள சமூகவாக்குகள் அதிகம் இருந்தும், மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் உதயகுமார் தன்னை ஒதுக்குவதாக கருதினார். எனவே அவரை 'ஓவர் டேக்' செய்து பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் நேரடியாக தொடர்பு கொண்டு 'சீட்' கேட்டு உள்ளார். கட்சித் தலைமை சீட் வழங்க இருந்த நிலையில், மாவட்ட செயலாளர் உதயகுமார் முட்டுக்கட்டை போட்டதால் அ.தி.மு.க.,வில் மாணிக்கத்திற்கு 'சீட்' வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்தார். எப்படியும் போட்டியிட்டே தீர்வது என்ற ஆர்வத்தில், நேற்று முன்தினம் (மார்ச் 28) மாலை சென்னை கிளம்பினார். நேராக த.வெ.க., வில் செங்கோட்டையனை சந்தித்து தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். அ.தி.மு.க.,வினருக்காகவே காத்திருந்த த.வெ.க.,வும் அவரை வாரி அணைத்து முதல் சந்திப்பிலேயே அவரையே சோழவந்தான் வேட்பாளராக்கி விட்டது.
மேலும்
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
-
விசைபடகு மீனவர்கள் அடாவடியால் நாட்டு படகு மீனவர்கள் பாதிப்பு
-
ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் அலுவலர் ஆய்வு
-
செங்கல்பட்டு இனிதாக பகுதி
-
திருவள்ளூரில் வேட்புமனு பெறப்படும் இடங்கள்
-
விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட்; மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம்: திமுக தேர்தல் வாக்குறுதி