ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் சட்டசபை தேர்தல் பணியில் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.
சட்டசபை தேர்தலில், ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் மதுராந்தகம் வட்ட அரசு அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான நரேந்திரன், பயிற்சியை துவக்கி வைத்தார்.
தேர்தலின்போது செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து, தேர்தல் அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சிகள் நடைபெறும்.இதில், தற்போது முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
மதுராந்தகம் தாலுகாவை சேர்ந்த தேர்தல் நடத்தும் தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 354 பேர், முதல் நிலை அலுவலர் 478 பேர், இரண்டாம் நிலை அலுவலர் 781 பேர், மூன்றாம் நிலை அலுவலர் 460 பேர் என, 2,073 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மதுராந்தகம் தாசில்தார் பாலாஜி, ஆர்.டி,ஓ.,வின் நேர்முக உதவியாளர் பெருமாள், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் வீரமணி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஓட்டுச்சாவடி மையங்களில் ஆய்வு
திருப்போரூர் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வரும் ஏப். 23ல் நடைபெறுகிறது. திருப்போரூர் தொகுதியில் மொத்தம், 369 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. திருப்போரூர் சட்ட சபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயகுமாரி புதுப்பாக்கம், சோணலுார் உள்ளிட்டபகுதிகளில்உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, ஓட்டுச்சாவடி மையத்தில் உள்ள அடிப்படை வசதிகளான மின்சார வசதி, மின்விளக்கு, கழிவறை வசதி, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் வந்து செல்ல சாய்தளவசதிகள்,பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும்
-
திருப்பூர் மாவட்டம் இனிதாக பகுதி
-
சிவா நிகேதன் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு
-
பிளஸ் 2 மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? திருப்பூரில் ஏப். 4, 5ல் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி
-
திருப்பூர் மாவட்ட வேட்பாளர்கள்
-
கூடுதல் நாட்கள் நீர் தேவை: விவசாயிகள் கோரிக்கை
-
திமுக ஆட்சி வெங்காயம் போல... உரித்தால் ஒன்றும் இருக்காது: இபிஎஸ்