‛ஆப்சென்ட்' ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க ஏற்பாடு

தேனி:தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க ஏற்பாடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டசபை தொகுதி வாரியாக சுமார் 6 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஓட்டுச்சாவடிகளில் பணி புரிய உள்ளனர். அவர்களுக்கு சட்டசபை தொகுதி வாரியாக மார்ச் 28 ல் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் 450க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அலுவலர்கள் பங்கேற்க வில்லை. பங்கேற்காதவர்களுக்கு மட்டும் சிறப்பு பயிற்சி வழங்க தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு பயிற்சி வழங்கிய பின் 2ம் கட்ட பயிற்சி வகுப்பு ஏப்., 10க்குப்பின் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவத்தனர்.

Advertisement