சிவகங்கை மாவட்டத்தில் 5 பேர் மனு தாக்கல்
சிவகங்கை:மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதியில் நேற்று முதல் நாளில் நாம் தமிழர் கட்சி, த.வெ.க., உட்பட 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேவகோட்டையில் சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி கயல்விழி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சிவகங்கையில் கோட்டாட்சியர் ஜெபி கிரேசியாவிடம்,வேட்பாளர் இந்துஜாவும், திருப்புத்துாரில் தேர்தல் அலுவலர் சிவபாலனிடம் வேட்பாளர் ரம்யா மோகன், மானாமதுரையில் தேர்தல் அலுவலர் ராஜாசிங்கிடம் வேட்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். *காரைக்குடி தொகுதி த.வெ.க., வேட்பாளர் டாக்டர் பிரபு தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும்
-
வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி! அடுப்புக்கரி, விறகுக்கு விலை அதிகரிப்பு
-
விளாம்பட்டியில் கட்சிக்கொடி, போஸ்டர், கொடிக்கம்பங்கள், தலைவர்கள் சிலை இல்லை: 60 ஆண்டுகளாக கடைபிடிக்கும் அதிசய கிராமம்
-
தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் திணறல் !
-
தினமலர் செய்தி எதிரொலி :பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்
-
விஜய் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக திமுக மீது திசை திருப்புகின்றனர்; திருமா குற்றச்சாட்டு
-
சேத்துாரில் ஒற்றை யானையால் ஏராளமான தென்னை மரங்கள் சேதம்:-இரவு காவல் பணிக்கும் விவசாயிகள் அச்சம்