3 வீடுகளில் திருட்டு முயற்சி :போலீஸ் விசாரணை
ராமநத்தம்: மூன்று வீடுகளில் கதவின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநத்தம் அடுத்த வெங்கனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன், 39; இவர், நேற்று முன்தினம் இரவு தனது பழைய ஓட்டு வீட்டின் கதவை பூட்டிவிட்டு, அதே கிராமத்திலுள்ள தனது புதிய வீட்டினுள் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் ராஜசேகரின் பழைய ஓட்டு வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர்.
அங்கு, பெரிய அளவில் பொருட்கள் ஏதுமில்லாததால் மர்மநபர்கள் திருடாமல் தப்பி சென்றனர். தொடர்ந்து, அதே கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மனைவி ரேணுகா, 40; மற்றும் பரமசிவம், 70; ஆகியோரின் வீடுகளிலும் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர்.
தகவலறிந்து வந்த ராமநத்தம் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சட்டம் ஒழுங்கு சரியில்லை என வாட்ஸாப்பில் அவதுாறு; கனிமொழி புகார்
-
நவீன வசதியுடன் கூடிய வாகனம் :தீயணைப்பு துறையினர் மகிழ்ச்சி
-
மானாமதுரையில் ஏப். 21ல் சித்திரை விழா துவக்கம்: வைகை சுத்தப்படுத்தப்படுமா:பக்தர்கள் எதிர்பார்ப்பு
-
திருப்புத்துார் தொகுதி மக்களின் தேவைகள் எதிர்பார்ப்பு வேட்பாளர்களின் வாக்குறுதிகளாக மாறுமா
-
காங்., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
-
பாக்., பல துண்டுகளாக சிதறும்: அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை