தேனுபுரீஸ்வரர் கோவில் பங்குனி விழா துவக்கம்
தாம்பரம்: தேனுபுரீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரம் திருக்கல்யாண தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது.
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் பழமைவாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திரம் திருக்கல்யாண தெப்பத் திருவிழா முன்று நாட்கள் விமரிசையாக நடக்கும்.
இந்தாண்டிற்கான விழா, நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு விநாயகர் புஷ்ப அலங்கார சாத்துபடி, தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணிக்கு விநாயகர் தெப்பத்தில் எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று சுப்பிரமணியர் தெப்ப உற்சவம், நாளை திருக்கல்யாண உத்சவம் நடைபெற உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இபிஎஸ் சொன்ன பொய்களை புத்தகமே போடலாம்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்க போர் விமான பைலட் மீட்பு
-
ரூ.9.5 கோடி தங்க நகை ராமநாதபுரத்தில் பறிமுதல்; பறக்கும் படை சோதனையில் சிக்கியது
-
சென்னையில் 16 தொகுதிகள்: எந்தக் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?
-
தேர்தலுக்கு பின் நல்ல செய்தி; மோடி உறுதியால் ராஜா மகிழ்ச்சி
-
வேல் ரிட்டன்... புத்தருக்கு ஓகே...: உதயநிதியின் 'மதசார்பின்மை'
Advertisement
Advertisement