லாரி மோதி ஒருவர் பலி

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே செங்கல் சூளையில், பின்நோக்கி சென்ற லாரி மோதி, செங்கல் சூளை ஊழியர் உயிரிழந்தார்.

கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் அருகே வைரங்குப்பம் கிராமத்தில் வசித்தவர் பழனி, 59; புதுவாயலில் உள்ள தனியார் செங்கல் சூளை ஊழியர். நேற்று முன்தினம், செங்கல் சூளையில் களிமண் லாரி பின்நோக்கி சென்றபோது, பழனி மீது மோதியது.

இதில் படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement