பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிட முடியாது: முதல்வர் மம்தா விமர்சனம்
கொல்கட்டா: 'மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் மக்களால் மீன் கூட சாப்பிட முடியாது; உணவு அரசியலை புகுத்தி அதற்கு பா.ஜ., முட்டுக்கட்டை போட்டு விடும்' என, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற் கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக, வரும் ஏப்., 23 மற்றும் 29ம் தேதிகளில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இங்கு, ஆளும் திரிணமுல் காங்., கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் நோக்கில் திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். புருலியா மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பா.ஜ.,வுக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை கிடையாது. கலவரத்தை துாண்டி, அதன் மூலம் குளிர்காய்வது தான் அக்கட்சியினர் வேலை. மீன் சாப்பிடுவது மேற்கு வங்க மக்களின் வாழ்வியலுடன் கலந்தது. இங்கு, பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், மீன் சாப்பிடுவதை தடுத்து நிறுத்துவர். இறைச்சி, முட்டை சாப்பிட கூட எதிர்ப்பு காட்டுவர். மக்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்? பா.ஜ.,வின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பொதுமக்கள் இரையாகி விடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த அம்மா இனி களியை தவிர வேறு ஒன்றும் சாப்பிட முடியாது.
இன்னும் ஒரு படி மேலே சென்று, பாஜக வந்தால் சாப்பிடவே முடியாது, பட்டினியாக சாவோம் என அடித்து விடுங்கள்... காசா பணமா.
கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம தி மு க மாதிரியே பொய் சொல்ற பொம்பள
வந்து பாரு மம்தா, பங்களாதேஷி ல் இருந்து வந்ததுகள், மீன், கஞ்சா என்று கருநாடகவிலும், தமிழ்நாட்டிலும் சுகபோகமாக, காங்கிரஸ் திமுகவின் காரணமாக வாழ்கிறார்கள்
திமுக மாதிரியே இந்த அம்மா உருட்டுகிறார். கற்பனைக்கு அளவு இல்லை.
சக்கர நாற்காலி தயாராகிவிட்டதா அம்மையாருக்கு திடிரென்று உடல் நிலை குன்றிவிடும் அல்லது வேண்டுமென்றே கீழே விழுவார் சிறிது அடி பட்டால் கூட இரண்டு சக்கர செர் தாயார் நிலையில் அவைத்திருக்க வேண்டும் தேர்தல் முடிந்த மறுநாளே அவைகள் எங்கு சென்றன என்று யாருக்குமே தெரியாது அம்மையாரும் நன்றாகவே நடந்து வருவார்கள் இது தேர்தலில் சமயோஜித புத்திமேலும்
-
அதிருப்தியால் த.வெ.க., தாவும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
-
விஜய் ஒரு நடிகர் தான்!
-
ஆட்டிசம் பாதிப்பால் தடையில் லை
-
விபத்தில் ஒரு காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத முதியவர்
-
'விஜய்க்கு கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறாது': முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
-
வெளிநாடு சென்று குப்பை சேகரிப்பாளர்களை ஊக்குவிக்கும் கிருஷ்ணா