இன்று இனிதாக...
ஆன்மிகம்
லட்சார்ச்சனை
லட்ச லலித சஹஸ்ரநாம அர்ச்சனை, சண்டி மஹா யாகத்தை ஒட்டி, கணபதி பூஜை, புண்யாஹவசனம் ஆராதனை - காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை மற்றும் மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை; மஹா மங்களாரத்தி - மதியம் 12:00 மற்றும் இரவு 8:00 மணி; அம்மன் பிரகார உற்சவம் - காலை 10.00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.
பிரம்ம ரத உத்சவம்
ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில் பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, கஜ வாகன உத்சவம் - மாலை 4:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.
ஸ்ரீ ராமநவமி
ஸ்ரீவாணி கலா கேந்திரா சார்பில் 33ம் ஆண்டு ராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, சம்பகோடு விக்னராஜாவின் பாடல், கிருஷ்ணசாமியின் வயலின், அனிருத் பட்டின் மிருதங்கம், ராஜசேகரின் மோர்ச்சிங் இசை கருவி - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
ஸ்ரீராமசேவா மண்டலியின் 73 ம் ஆண்டு ஸ்ரீ ராமோத்சவத்தை ஒட்டி, ஸ்பூர்த்தி பஜனை மண்டலியின் பஜனை - மாலை 5:30 மணி; பெங்களூரு சஹாஸ் முரளி குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி - 6:30 மணி. இடம்: ஸ்ரீ ஆவனி சங்கர மடம், நான்காவது பிரதான சாலை, ஒன்பதாவது குறுக்கு சாலை, வித்யாரண்யபுரம், மைசூரு.
ஸ்ரீ ராமபுத்யா சபை நல அறக்கட்டளை சார்பில் 136ம் ஆண்டு ராமோத்சவ சங்கீத உத்சவத்தை ஒட்டி, ஜெயந்தி குமரேசின், அக்கரை சுப்புலட்சுமியின் ஜுகல்பண்டி, அர்ஜுன் குமாரின் மிருதங்கம், ராமானுஜத்தின் கடம் - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீமதி ஆலம்மன திருமண மண்டபம், ஸ்ரீராம்பேட், மைசூரு.
ருத்ர ஹோமம், யோகஸ்ரீயின் தசவாணி இசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீராம மந்திர், ஜெயநகர், மைசூரு.
பங்குனி உத்திரம்
சமர்ப்பணம் அமைப்பு சார்பில் பங்குனி உத்திரம் எனும் 12வது உத்திரம் விளக்கு உத்சவத்தை ஒட்டி, சஹஸ்ரநாமம் அர்ச்சனை, ராகவன் குருவின் சீடர்களான கர்நாடக பிரிவு திருப்புகழ் அன்பர்கள் சார்பில் திருப்புகழ் இசை வழிபாடு - காலை 8:00 முதல் மதியம் 1:30 மணி வரை; சென்னை நிரஞ்சனா விக்னேசின் 'கந்தன் கருணை' சொற்பொழிவு - மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை. கனபாராயணம், வேத பண்டிதர்களின் வில்வ அர்ச்சனை - மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீ கோதண்டராம சமுதாய பவன், ஸ்ரீராம கோவில் வளாகம், இஸ்கான் எச்.பி.ஆர்., லே - அவுட், காச்சரகானஹள்ளி, பெங்களூரு.
பிரதோஷம்
பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தை ஒட்டி, பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
மஹா ருத்ராபிஷேகம், பால பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், சிறப்பு பிரதோஷ அபிஷேகம், தீர்த்த பிரசாதம் வழங்கல் - மாலை 3:30 மணி. இடம்: ஸ்ரீ சதாசிவா கோவில், லிங்கராஜபுரம்.
நந்தி, சோமேஸ்வரருக்கு அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களராத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.
ஏகாம்பரீஸ்வரர், நந்திக்கு அபிஷேகம், ஏகாம்பரீஸ்வரர் - காமாட்சி சமேத பிரகார உத்சவம் - மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.
நந்தி, விஸ்வநாதேஸ்வரர், விசாலாட்சிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், விஸ்வநாதேஸ்வரர் - விசாலாட்சி சமேத பிரகார உத்சவம் - மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
அபிஷேகம் - மாலை 5:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை - 6:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.
அபிஷேகம் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ பஞ்சலிங்க நாகேஸ்வரர் கோவில், பேகூர், பெங்களூரு.
அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி; பல்லக்கு உத்சவம் - 8:30 மணி. இடம்: ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தம்புசெட்டி சாலை, காக்ஸ்டவுன்.
அபிஷேகம் - மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: கவி கங்காதேஸ்வரா கோவில், கவிபுரம், பசவனகுடி.
அபிஷேகம் - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ காடு மல்லிகார்ஜுனா கோவில், மல்லேஸ்வரம்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
இலவச மருத்துவ முகாம்
ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 0821 - 2548 231, 87624 09110.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சின் லுங் பிரிவெரி, 1135, 100 அடி சாலை, இந்திரா நகர்.
லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.
கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, லோடஸ் பில்டிங், மூன்றாவது தளம், 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
மல்லு நைட்ஸ் - மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டொபோமைன், 36, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
காமெடி
ஜோக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
டூ பீஸ் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
டில்லி வெர்சஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:50 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
மேலும்
-
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தர்மபுரியில் சவுமியா அன்புமணி போட்டி
-
திமுகவின் இல்லத்தரசி திட்டம் ரூ.4,000 கோடி ஊழலுக்கு வழிவகுக்கும்; பாஜ குற்றச்சாட்டு
-
தொண்டர்களை மதிக்கத் தெரியாதவருக்கு 'சீட்' ராணிப்பேட்டை தி.மு.க.,வில் கொந்தளிப்பு
-
முதல்வர் ஸ்டாலின், சீமான், வேட்பு மனு தாக்கல் முதல் சாத்தான்குளம் வழக்கில் தண்டனை அறிவிப்பு வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 30)!
-
அனல் பறக்கும் களம்; இன்னும் 24 நாட்கள் தான்; இன்றைய (மார்ச் 30) தினமலர் தேர்தல் களம்!
-
குவைத் மின்நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்: இந்தியத் தொழிலாளி பலி