எங்களை பார்த்தா பைத்தியமா தெரியுதா? நா.த.க., சீமான் ஆவேசம்
சென்னை: ''நடிச்சா மட்டும் போதுமா; நாட்டை கொடுத்து விடுவீர்களா?'' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
வந்தவாசியில், தேர்தல் பிரசாரத்தின்போது, நேற்று அவர் பேசியதாவது: நீங்கள் எதற்கு மொபைல் போன் வைத்துள்ளீர்கள். எத்தனை நாளைக்கு 'ரீல்ஸ்' பார்த்துக்கொண்டே இருப்பீர்கள். அறிவை தேடி ஓடுங்கள். நடிச்சா போதுமா, நாட்டை கொடுத்து விடுவீர்களா, நடிச்சா நோட்டை கொடுப்போம். நடிப்பதை நிறுத்தி விட்டால், நாட்டை கொடுப்போம் என்றால் உங்களுக்கு அறிவு இருக்கா?
எங்களைப் பார்த்தால், பைத்தியமாக தெரிகிறதா. காமராஜர், கக்கன் ஆகியோர் எல்லாம் தலைவர் என்றால், நடிகன் எப்படி தலைவன் ஆவான். கலையை ரசி, போற்று. அவன் கிட்டே நாட்டை கொடுப்பேன் என்றால், தலைவனுக்கும் நடிகனுக்கும் வேறுபாடு தெரியாத தற்குறியா நீ.
கேரளா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், திரையரங்கில் தலைவனை தேடவில்லை. ஓட்டை 500, 1,000 ரூபாய்க்கு விற்பது, வாக்கரிசி வாங்கி தின்பதற்கு சமம். விசிலை ஊதுவதற்கு என்ன செய்தான். திரையரங்கில் ஊதி திரிந்தான். இன்று தெருவில் ஊதி திரிகிறான் அவ்வளவு தான்.
சூரியனுக்கு ஓட்டு போட்டால், அவர்கள் வீட்டில் தான் விடிகிறது. இரட்டை இலை, 60 ஆண்டுகளாக மொட்டை இலையாக தான் இருக்கிறது. ஒன்றும் துளிர்விடல. எவன் தோற்றாலும், விவசாயி தோற்றான் என்ற நிலை உருவாகக் கூடாது.
என்னை வெற்றி பெற வைக்காமல், தேர்தலுக்கு பின் யாரேனும் மனு எடுத்து வந்தால், கொன்றே விடுவேன். அண்ணே, வீட்டை இடிக்கிறான், நிலத்தை பறிக்கிறான் என்றால், ஓட்டு போடும்போது எங்கே சென்றீர்கள். இந்த பிரச்னையை தருபவர்களே வெற்றி பெறுவது எப்படி? இவ்வாறு அவர் பேசினார்.
இனி வென்றால் முயற்சி, தோற்றால் பயிற்சி என்று புலம்பவேண்டியதுதான் பாக்கி ...
பிரச்னை என்றால் அதை தீர்க்க மட்டும் சீமான் வேண்டும் ஆனால் ஓட்டை மட்டும் நாங்கள் துட்டை வாங்கிக்கொண்டு போட்டுவிடுவோம் என்றால் எப்படி? பிரச்சனை தருபவனுக்கே ஓட்டை போட்டுவிட்டு அப்புறம் குத்துதே குடையுதே என்றால் என்ன செய்வது? சீமானுக்கு எதிராக இங்கே பேசுபவர்களுக்கும் சேர்த்துதான் சீமான் இங்கே போராடிக்கொண்டு இருக்கிறார். சீமானை குறை கூறுபவர்கள் ஒரே ஒரு முறை மட்டும் அவருக்கு ஓட்டுபோட்டுவிட்டு அப்புறம் பேச வாருங்கள்.
அவருக்கு நன்றாக தெரியும் .. ஒரு சீட் கூட கிடைக்காது என்று ஆனாலும் வேட்பாளர்களை நிறுத்துகிறார்
ஓட்டுக்களை பிரித்து தி மு க வெற்றி பெறவே அன்றி வேறு நோக்கம் கிடையாது.
The man who is speaking about ACTOR was also an ACTOR himself, KETTLE calling the POT black.
He is also from the TINSEL WORLD cheating the GULLIBLE Tamil youth with his fiery meaningless speech.
கடைசியில் தன் நிலையை புரிந்து கொண்டார் இவர் ஒரு இந துரோகி, தாய் மண்ணுக்கு விசுவாசி அல்ல, eezha மக்களுக்கு துரோகம் செய்தவர், சொந்த கட்சியின்த்ரோகம், ஈழ பாவங்களிடம் வசூல் செய்து அதை தான் ஊன் வளர்த்தார். ஈழம்,பிரபாகரன் என பேசி இப்போது கைத்தட்டபின் பறக்கவிட்டார். எண்ஜோயிங் லைப் வித் பிறர் கொடுக்கும் panam.