நாடு முழுதும் 'நீட்' தேர்வுக்கு 26 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: நாடு முழுதும் 'நீட்' தேர்வுக்கு, 26 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நாடு முழுதும் எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடக்கிறது.

நடப்பாண்டு 'நீட்' நுழைவுத் தேர்வு, வரும் மே 3ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த பிப்., 8ம் தேதி துவங்கி, மார்ச் 11ம் தேதி வரை நடந்தது. கடந்த ஆண்டுகளை காட்டிலும், நடப்பாண்டு 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

நாடு முழுதும் கடந்த 2024ம் ஆண்டு, 24.06 லட்சம் பேர்; 2025ம் ஆண்டு 22.76 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், தற்போது 26 லட்சமாக உயர்ந்துள்ளது.

விரைவில், தேர்வுக்கான நுழைவு சீட்டை வெளியிட, தேசிய தேர்வுகள் முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement