ஓசூர், ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்

2

சென்னை: ஓசூர், ஊத்தங்கரை தொகுதிகளின் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் மாற்றப்பட்டு இருப்பது அக்கட்சியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் த.வெ.க., தனித்து போட்டியிடுகிறது. கடந்த மார்ச் 29ம் தேதி, வேட்பாளர்களை த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்தார்.

அப்போது, ஓசூரில் அம்ப்ரிஷ்; ஊத்தங்கரை தனி தொகுதிக்கு குமரவேல் ஆகியோரை விஜய் அறிவித்தார். ஆனால், ஓசூர் தொகுதியில், அம்ப்ரிஷ் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அவருக்கு பதில், வேந்தர்கரசன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல், ஊத்தங்கரையில் குமரவேலுக்கு பதில், இளையராஜா, ரமேஷ் ஆகிய இருவர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். த.வெ.க., வேட்பாளர்கள் மாற்றம் குறித்து, எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாததால், ஓசூர், ஊத்தங்கரையில் த.வெ.க., பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுபோல, தமிழகத்தில் வேறு எந்தெந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர் என்பது குறித்தும் தெரியாததால், த.வெ.க., நிர்வாகிகள் குழப்பமாகி உள்ளனர்.

Advertisement