லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி கைது
நமது நிருபர்
வங்கதேச எல்லை அருகே லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முக்கிய புள்ளி ஷபீர் அகமது லோனை டில்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
டில்லி, கோல்கட்டா மற்றும் தமிழகத்தில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்த இளைஞர்களை சேர்ப்பதில் ஷபீர் அகமது லோன் ஈடுபட்டு வந்துள்ளான். இதையறிந்த டில்லி சிறப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இவன் முன்னதாக 2007ம் ஆண்டில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டான். பிறகு 2019ல் ஜாமின் பெற்று ஷபீர் அகமது லோன் வங்கதேசத்திற்கு தப்பி ஓடினான்.
பயங்கரவாத சதி செயலுக்கு திட்டம் தீட்டி கொடுத்து, பயங்கரவாத குழுவை நிறுவி வந்தான். இவன் பாதுகாப்பு படையினருக்கும், டில்லி பயங்கரவாத எதிர்ப்பு படைக்கும் தலைவலியாக இருந்து வந்தான். இவனது செயல்களை டில்லி சிறப்பு பிரிவு போலீசார் உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். தற்போது வங்கதேச எல்லை அருகே கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ஷபீர் அகமது லோனை தவிர, 2002ல் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பிறகு 2017ல் விடுதலை செய்யப்பட்ட ஷேக் சஜ்ஜாத் குல்லையும் என்ஐஏ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தீவிரமாகத் தேடி வருகின்றன. இவன் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றுள்ளான். பஹல்காம் தாக்குதல் உட்பட பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்தது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது.
பிடிபடும் தீவிரவாதிகளை சித்ரவதை செய்து அவர்களை பரலோகத்துக்கு அனுப்பவேண்டும்.
சிறையில் வைத்து பிரியாணி போடவா ? தகவல் உருவிட்டு சுட்டு கொன்னுடுங்க. தேவை இல்லாத ஆணி .
பாகிஸ்தானின் முக்கிய முன்னாள் பயங்கரவாதி பாஜ்வா , தனது மருமகள் உடன் வீட்டில் இருந்த பொது தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று இறந்து போனார் , வீட்டில் ஒரு ஹூர் , வேறெங்கோ 71 ஹூர்
இந்த அயோக்கியனைச் சுட்டுத் தள்ளுங்கள்.மேலும்
-
எங்களை ஓட்டு வங்கியாக கருதுங்கள்!
-
சுற்றலில் விடப்பட்ட சுற்றுலா துறை அறிவிப்புகள்
-
ஜோதிடத்தை மீறி தி.மு.க., ஆட்சிக்கு வரும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
எனக்கு விவசாய நிலம் இல்லை: 'விவசாயி' பழனிசாமி தகவல்
-
கல்யாண விருந்துக்கு அழைத்த த.வெ.க., சின்ன தோசையை கொடுத்த தி.மு.க., : காங்., பிரவீன் ஒப்பீட்டால் மீண்டும் சர்ச்சை
-
இன்ஸ்டா ரீல்சுக்காக நேரத்தை போக்கும் வேட்பாளர்!