எனக்கு விவசாய நிலம் இல்லை: 'விவசாயி' பழனிசாமி தகவல்
- நமது நிருபர் -
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்; நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது, அவர் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் உள்ள விபரம்: பழனிசாமியிடம் 50,000 ரூபாய்; அவரது மனைவி ராதாவிடம் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளன. அவர் பெயரிலோ, அவர் மனைவி பெயரிலோ கார் உட்பட எந்த வாகனங்களும் இல்லை. பழனிசாமியிடம் 100 கிராம் தங்க நகை, அவர் மனைவியிடம் 720 கிராம் தங்க நகை உள்ளன. மொத்தமாக பழனிசாமிக்கு 3.16 கோடி ரூபாய் அசையும் சொத்து உள்ளது.
அவர் பெயரில் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை. அவர் மனைவி ராதா மற்றும் குடும்பத்தினர் பெயரில், 5.83 கோடி ரூபாய் அசையா சொத்து உள்ளது. மொத்தமாக பழனிசாமி பெயரில், 8.99 கோடி ரூபாய் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. கடன் 17 லட்சம் ரூபாய்; ஐந்து குற்றவியல் வழக்குகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.
தொழில் விவசாயம் என தெரிவித்துள்ள பழனிசாமிக்கு, சொந்தமாக வேளாண் நிலங்கள் இல்லை. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, பழனிசாமி தனக்கு 6.70 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். தற்போது அவரது சொத்து மதிப்பு 2.29 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
சாத்தான்குளம் கொலை குற்றவாளிகள் ஒன்பது காவல்துறையினருக்கு மரணதண்டனை தீர்ப்பு..
அதுபோல கொடநாடு எஸ்டேட் கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை எப்போது???
உயர் தர பாண்ட் சர்ட் அணிந்து விவசாய நிலத்துக்கு சிமெண்ட் ரோடு போட்டவரு எப்படிங்கோ ????
அப்போ விவசாய வேலைக்கு செல்கிறீர்கள் அன்றாட சம்பளத்திற்கு
மிகவும் வறுமையில் வாடும் "விவசாயி" திருட்டு முன்னேற்றக் கழகம் ஏதாவது சலுகை வழங்கி இந்த வறுமையில் வாடுபவரை காப்பாற்ற வேண்டும்
இனி விவசாயிகள் படும் கஷ்டங்களை பற்றி பேசவே கூடாது
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
Dont have agri land, but have accounts at Swiss bank
விவசாய நிலம் இல்லன்னா கூலி வேலை செய்
முதல்வராகயிருந்த உங்களுக்கு விவசாய நிலமில்லையா? நம்ப முடியவில்லை. ஆதலால் உங்களுக்கு அரசியலில் இருக்க கொஞ்சமும் தகுதியில்லை, அனுபவமும் போதவில்லை. உங்கள் சகாவான திமுக வை பார்த்தாவது நீங்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. சாதாரண வட்டாரத் தலைவர்களே தங்கள் தலைவர்களை பார்த்து மிகக் குறிகிய காலத்தில் நிறைய சம்பாதித்து விடுகின்றார்கள். இனிமேலாவது பிழைக்க கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த எலேச்டின் யார் ஜெயிப்பார்கள் என்று சொல்ல முடியாதுமேலும்
-
கனவுகளால் கடலை வென்ற பார்வையற்ற பெண்
-
கள் இறக்கும் எளியவர்கள் பயங்கரவாதிகளா? தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆவேச கேள்வி
-
அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் விழிப்புணர்வு
-
தொண்டர்கள் 'அட்ராசிட்டி': 'பளார்' விட்ட திருமா
-
எப்போதும் ஏ.சி.யில் இருக்கிறீர்களா? உடனே எலும்பு பரிசோதனை செய்ங்க!
-
புறவழி சாலைக்காக முடக்கப்பட்ட நிலங்கள்: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விடுவிப்பு