சுற்றலில் விடப்பட்ட சுற்றுலா துறை அறிவிப்புகள்
தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணியர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், அத்துறை மேம்படுத்தப்படவில்லை. அத்துறையை மேம்படுத்த, தி.மு.க., அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அவற்றில் பல செயல்பாட்டிற்கு வரவில்லை.
அவற்றின் விபரம்:
* மதுரை - ராமேஸ்வரம் - கொடைக்கானல் இடையே, ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்படும்
* தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்கும் விடுதிகளை, இணையதள பயண நிறுவனங்களின் இணையதளத்தில் இடம்பெறச் செய்து பிரபலப்படுத்தி, அதன் வருவாய் அதிகரிக்கப்படும்
* ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே, சொகுசு கப்பல் சேவை, படகு சேவை தொடங்கப்படும்
* சுற்றுலா தலங்கள், மலைவாச தலங்கள் மற்றும் ஆன்மிக தலங்களை இணைப்பதற்கு, கேபிள் கார் வசதி ஏற்படுத்தப்படும்
* மாமல்லபுரம், முதலியார் குப்பம், மனோரா, அரியமான், முட்டம் கடற்கரைகளுக்கு, நீலக்கொடி அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்
* காபி, தேயிலை, ரப்பர், நறுமணப் பொருட்கள் அதிகளவில் விளையும் ஊட்டி, கொடைக்கானல், மேகமலை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில், தோட்டக்கலைப் பயிர் சுற்றுலா ஏற்படுத்தப்படும். சுற்றுலாப் பயணியர், பண்ணை தோட்டங்களில் உள்ள விவசாயிகளுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும்
* வெளிநாட்டினர் ஆயுஷ் மருத்துவ சேவையை பெறுவதற்கு அதிகளவில் வருவதால், மருத்துவ சுற்றுலா மேம்படுத்தப்படும்
* நீர் விளையாட்டுகள், சாகச விளையாட்டுகள், தங்கும் வசதியுடன் கூடிய கேரவன் இயக்குவோர் மற்றும் திறந்தவெளி முகாம்கள் நடத்துவோருக்கான, வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும்
* உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரையில், ராயல் மெட்ராஸ் யாட் கிளப்புடன் இணைந்து, மோட்டார் படகுகள், அதிவிரைவு படகுகள் மற்றும் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும்
* பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், மறுசீரமைப்பு செய்யப்பட்டு லாபம் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
* பழமையான கோவில்களில், முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி - ஒளி காட்சி, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்
* பூண்டி ஏரியில் நீர் விளையாட்டுகள், படகு சவாரி, சாகச விளையாட்டுகள் மற்றும் பறவைகளை காண பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டு, சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்
* துாத்துக்குடி கடற்கரையில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள் போன்ற வசதிகள் அமைத்து, சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்
* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை, சாகச சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்
* காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கரூர், மதுரை போன்ற மாவட்டங்களில், சமண, புத்த மதங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற தலங்களை சுற்றுலாப் பயணியர் கண்டுகளிக்க, உலகத்தரத்திலான சுற்றுலா வசதிகள் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்
* சுற்றுலாத் துறைசார் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டம், தமிழக அரசால் கொண்டு வரப்படும்
* சுற்றுலாத் துறையில், தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், மாமல்லபுரம் - மரக்காணம் கடலோர சுற்றுலா வழித்தடம்; திருச்சி - தஞ்சாவூர் - நாகை சோழர்கால சுற்றுலா வழித்தடம்; மதுரை - சிவகங்கை மரபுசார் சுற்றுலா வழித்தடம், கோவை - பொள்ளாச்சி இயற்கை நலன் சுற்றுலா வழித்தடம் அமைக்கப்படும்.
மேலும்
-
எமகண்டம் முடியும் வரை காத்திருந்து மனு தாக்கல் செய்த துரைமுருகன்
-
சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு ஜவாஹிருல்லா சென்றது ஏன்? ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
-
தன் பெயரில் களம் இறங்கிய சுயேச்சை; 100 பேர் வந்தாலும் கவலை இல்லை என்கிறார் செந்தில் பாலாஜி
-
மோடி, அமித் ஷா வாகனத்தை சோதனை செய்வார்களா: கேட்கிறார் வைகோ
-
மேலுார் காங்கிரஸ் வேட்பாளரை வெளியேற்றிய உள்ளூர் நிர்வாகிகள்
-
செந்தில்பாலாஜிக்கு மாற்றாக தம்பி அசோக்குமார்!