ஜோதிடத்தை மீறி தி.மு.க., ஆட்சிக்கு வரும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: ''தி.மு.க., இரண்டாவது முறையாக இதுவரை ஆட்சிக்கு வந்ததில்லை என ஜோதிடம் சொல்கிறது. அதையெல்லாம் மீறி, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அவர் அளித்துள்ள பேட்டி: தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் இருந்து வாதாடி, போராடி பெற்றுத் தர தி.மு.க.,வால் மட்டுமே முடியும். பா.ஜ.,வின் அடிமையாக அ.தி.மு.க., உள்ளது. இவர்கள் தமிழகத்தின் உரிமைகளை பெறாமல், பணிந்து போவர்.
எனவே, தமிழகத்தை தி.மு.க., தான் ஆள வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். அதனால் தான் தமிழகத்திற்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே போட்டி என நாங்கள் சொல்கிறோம்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி, பிற சலுகைகள், நாம் ஜி.எஸ்.டி.,யாக கொடுக்கும் வரிகளை தமிழகத்திற்கு வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றுகிறது. அதையும் மீறி, தி.மு.க., அரசு பல திட்டங்களை நிறைவேற்றி, பல்வேறு துறைகளில் நாட்டின் முதல் மாநிலமாக திகழ்கிறது.
மத்திய அரசுக்கு அடிமையாக அ.தி.மு.க.,வினர் துணை நிற்கின்றனர். எங்கள் மீது குறை சொல்வதற்கு, வேறு எந்த காரணமும் கிடைக்காததால், சட்டம் - ஒழுங்கு சரியில்லை; தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்கின்றனர்.
இதற்கு, பல்வேறு நேரங்களில் விரிவான விளக்கம் அளித்துள்ளேன்; சட்டசபையிலும் ஆதாரங்களை எடுத்து சொல்லி இருக்கிறேன். பா.ஜ., ஆட்சி நடத்தும் மாநிலங்களை விட, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. அதனால் தான், தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு பல்வேறு நாடுகள், மாநிலங்களில் இருந்து தொழில் முனைவோர்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.
யாரும் வைக்காத கோரிக்கைகளை கூட, நாங்கள் திட்டங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.வாழ்நாள் முழுதும் தமிழ் மொழிக்காக போராடி கொண்டிருக்கிறோம். இரு மொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, 'ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை; அவர் முதல்வராக மாட்டார் என ஜாதகம் சொல்கிறது' என பிரசாரம் செய்தனர். இப்போது, தி.மு.க., இரண்டாவது முறையாக இதுவரை ஆட்சிக்கு வந்ததில்லை என ஜோதிடம் சொல்கிறது. அதையெல்லாம் மீறி, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும்; தொடர்ந்து ஆட்சிக்கு வந்து கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்துமத துரோக இந்துமத விரோத மானங்கெட்ட திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் திவாலாகிவிடும் திராவிட மாடல் களவானிங்க உலக பணக்காரன்களாகி விடுவானுங்க அதனால திமுக ஆண்டது போதும் மக்கள் திராவிட மாடல் சாராயத்தால் மாண்டது போதும் ஆளை விடுங்கடா சாமி
அப்போ ஜோதிடம் சொல்வது திமுக படு படு தோல்வி என்றா??அப்போ திருட்டு முரடர்கள் கயவர்கள் கழகம் மண்ணை கவ்வும் என்று சொல்கின்றதா ஜோதிடம்???
எங்களுக்கு திருப்பரங்குன்றம் வேலன் மீது நம்பிக்கை இருக்கிறது! அவன் நின்று கவனித்து சிரித்துக் கொண்டு இருக்கிறான்! அது நிச்சயம் கோட்டையில் எதிரொலிக்கும்!
ஜோதிடத்திற்கும் , சரித்திரத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு முதல்வர்.
மத்திய அரசு எவ்வளவு நிதி பாக்கி வைத்துள்ளது என வெள்ளை அறிக்கை கொடுங்க தலீவரே
இவருக்குக்தான் ஜோதிடம் மீது நம்பிக்கையே இல்லையே? பின்னர் ஏன் அதை மேற்கோள் காட்டிப் பேசுகிறார்? புரிகிறது இவரோ அல்லது இவர் சார்பிலோ யாரோ ஒருவர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து யாரிடமோ ஜோதிடம் பார்த்திருக்கிறார்கள்.
சோதிடம் என்பதும் கருத்து கணிப்பு என்பதும் அறிவியல்பூர்வமாக உண்மை என்பது நிரூபிக்கப்படாததால் காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்டது.
நீர் உம் மனைவியை கோயிலுக்கு அனுப்பாமல் ஜாதகம் பார்க்காமல், யாகம் நடத்தாமல் தடை செய். உங்களை திராவிடன் என்று ஒத்துகொள்கிறோம்.
அப்பா உங்களை பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை . உங்களையும் உங்கள் கட்சியையும் துடைத்து ஏறிய போகிறாரார்கள் மக்கள் என்பது நன்கு தெரிந்தும் ஆட்சி காட்சி என்று சொல்லிக்கொண்டு அலைகிறீரே
நாத்தம் பிடித்த நாத்தீக தாடியின் அழுக்கு சட்டைய ன்ங்களுக்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம். முல்லா ஓதுபவன் சொன்னால் தான் ஓத த வாக்குமேலும்
-
முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும்; உளுந்துார்பேட்டை வேட்பாளர் குமரகுரு உறுதி
-
நாராயணபுரம் ஏரியில் மூழ்கி மாயமான வாலிபர் உடல் மீட்பு
-
தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது ;வில்லிவாக்கம் விஜயகுமார் ஆக்ரோஷ பேச்சு
-
இஸ்திரி போட்ட அ.தி.மு.க., வேட்பாளர்; திருவொற்றியூரில் கவனம் ஈர்த்த ஓட்டு சேகரிப்பு
-
'ஸ்கை லிப்ட்' தீயணைப்பு வாகன வசதி; அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் வாக்குறுதி
-
ஆயிரம்விளக்கில் 'விசேஷ' துண்டு பிரசுரம் ;பரபரப்பை கிளப்பிய த.வெ.க., பிரபாகர்