வேட்பாளர் உறவினர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு
போடி:தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது குடும்பத்தினர் மட்டும் இன்றி ரத்த உறவுகளின் சொத்து விபரமும் சமர்ப்பிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அசையும் சொத்து, அசையா சொத்து, வங்கியில் டெபாசிட், முதலீடுகள், வெளிநாட்டு சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதில் குடும்பத்தினர் சொத்துக்களும் அடங்கும். சிலர் கூட்டு குடும்பமாக இருப்பதோடு, கூட்டு சொத்தாகவும் இருக்கும் நிலையில் வேட்பாளரின் சகோதரர், சகோதரிகளின் சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். அவர் எவ்வகையான வரி செலுத்துகிறார். அரசு பணியில் உள்ளாரா என்றும், வேட்பாளர் மீது உள்ள குற்ற வழக்குகள், அதன் தன்மை, தண்டனை குறித்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
மேலும்
-
மங்களூரில் மே 1ம் தேதி முதல் ரேஷன் முறையில் தண்ணீர்
-
மே 1 முதல் மதுபானங்களின் விலை 20 சதவீதம்... உயர்கிறது! கலால் வரியில் திருத்தம் செய்ய மாநில அரசு முடிவு சித்து அரசு பதவியேற்ற பின் 5வது முறையாக அதிகரிப்பு
-
வந்தே பாரத் ரயில் பொம்மை!
-
இன்று இனிதாக... (26.04.2026) பெங்களூரு
-
பொது இடத்தில் அநாகரிகம் காதல் ஜோடிக்கு கண்டனம்
-
ஆட்டோ பிரச்னை சகோதரர்களுக்கு அடி, உதை