பொது இடத்தில் அநாகரிகம் காதல் ஜோடிக்கு கண்டனம்
உடுப்பி: உடுப்பி மணிப்பால் பகுதியில், சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த இளம் காதல் ஜோடி, பொது இடம் என்றும் பாராமல் இருவரும் மாறி, மாறி முத்தம் கொடுத்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், பொது இடத்தில் என்ன செய்கிறீர்கள் என்று, காதல் ஜோடியிடம் கேட்டார்.
இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டனர். இச்சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியானது. வீடியோவை பார்த்த பலரும் காதல் ஜோடிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, மணிப்பால் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது:
உடுப்பி மணிப்பாலுக்கு என மதிப்பு, மரியாதை உண்டு. இதையெல்லாம்,வடமாநிலத்தை சேர்ந்த காதல் ஜோடி கெடுத்து விட்டது. அவர்கள் தனிமையில் இருக்க பொது இடம் தான் கிடைத்ததா. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் நம் நாட்டின் கலாசாரத்தையே கெடுத்து விடுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
நகர பகுதியில் தெரு நாய்கள் அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்
-
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் டிராபிக் ஜாம்
-
தமிழ் சங்கங்களின் ஐம்பெரும் விழா
-
பெண் மீது பைக்கில் மோதிய வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
-
கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஜனன உற்சவ சிறப்பு பூஜை
-
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா