தேர்தல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி; ஏப்.4ல் சென்னையில் பிரசாரம்
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி ஏப்.3ம் தேதி சென்னை வருகிறார். ஏப்.4ம் தேதி அவர் மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு, கையோடு தங்கள் தொகுதிகளை வலம் வர ஆரம்பித்துவிட்டனர்.
தமிழகத்தில் பாஜ வேட்பாளர்கள் பட்டியலை கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்க இருக்கிறது. இந் நிலையில் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். ஏப்.3ல் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அவர் அன்றைய தினமே சென்னை வருகிறார்.
பின்னர், ஏப்.4ம் தேதி சென்னையில் பாஜ நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அதே நாளில் அவர் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் ரோடு ஷோ செல்கிறார். அங்கு போட்டியிட உள்ள பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
சட்டசபை தேர்தலுக்கு பின் முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருவதால் பாஜவினரும், கூட்டணிக் கட்சியினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து (20)
Ramesh - ,
31 மார்,2026 - 00:13 Report Abuse
Modi sir, You can concentrate on West Bengal, Already self motivated Tamil nadu BJP warrior are fully upset.
again BJP lost the Hard work put up by these Warriors in Social media.
BJP may win about 6 seats only. 0
0
Reply
vivek - Benaras,இந்தியா
30 மார்,2026 - 18:29 Report Abuse
அன்னிக்கு தான் தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 1 என்ற ரேஞ்சில் ஜீ உருட்டுவார். 0
0
Reply
SRIRAMA ANU - Chennai,இந்தியா
30 மார்,2026 - 18:15 Report Abuse
தேர்வு சுதந்திரம் Freedom of Choice: சிலரது வீட்டில் ஏற்கனவே பழைய பிரிட்ஜ் இருக்கலாம், அவர்களுக்கு ஒரு வாஷிங் மெஷின் தேவைப்படலாம். சிலருக்கு மிக்ஸி பழுதாகி இருக்கலாம். அரசு கொடுக்கும் ஒரே பொருளுக்காகக் காத்திருக்காமல், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ் என எது தேவையோ அதை இந்த 8,000 ரூபாய் கூப்பனை வைத்து மக்கள் வாங்கிக்கொள்ளலாம். பணம் வீணாவதைத் தடுத்தல்: "பணமாகக் கொடுத்தால் அதை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கூப்பனாகக் கொடுத்தால், அது வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே பயன்படும்" என்கிறது திமுக தரப்பு. 0
0
Reply
SRIRAMA ANU - Chennai,இந்தியா
30 மார்,2026 - 18:14 Report Abuse
அரசு கொள்முதல் செய்து கொடுக்கும் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது புகார்கள் எழும். ஆனால், மக்களே கடைக்குச் சென்று தங்களுக்குப் பிடித்த பிராண்டைத் தேர்வு செய்யும்போது அந்தப் புகார் எழாது. அதிமுக பிரிட்ஜ் என்றதும், திமுக அனைத்தும் என விரிவுபடுத்தியது ஒரு புத்திசாலித்தனமான நகர்வுதான். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தியதுடன், இந்த 8,000 ரூபாய் கூப்பனையும் சேர்த்திருப்பது பெண்களின் வாக்குகளைக் குறிவைத்து வீசப்பட்ட அஸ்திரம். இருந்தாலும், "8,000 ரூபாய்க்குள் நல்ல தரமான வாஷிங் மெஷினோ, பிரிட்ஜோ கிடைக்குமா? மீதிப் பணத்தை மக்கள் கையில் இருந்து போட வேண்டுமே?" என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதேபோல், பழைய பொருட்களை மாற்றிக்கொள்ளவும் Exchange இந்த கூப்பனைப் பயன்படுத்தலாம் என்பது ஒரு ஆறுதல். 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
30 மார்,2026 - 17:55 Report Abuse
மொதல்ல வேட்பாளர் யாருன்னு சொல்லுங்க ஜி 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
30 மார்,2026 - 17:42 Report Abuse
பீ ஜே யெ பியை கவுத்து விட்டனைய்யா எட்டப்பன். உங்க அமீத் ஷாவையும் BJP யையும் முட்டாளாக்கி த்தான் அதற்க்கு ஜிங்ச்சா போட்டது நாயினார் வானதி உங்க தமிழ்நாட்டுக்காரன் மத்திய அமைச்சரான துணை கொண்டு தீ மு காவுடன் சேர்ந்து பழனி செய்த மோசாடி. தமிழ் நாட்டில் BJP க்கு 10 ஆட்டி பள்ளம் தோண்டி பொதச்சுட்டான். நாயனாருக்கு மட்டும் பச்சை கோடி. அதன் பிறகு அதுவும் வாழைய்ய ஆட்டிகிட்டு பழனி வீட்டு கொல்லைக்கு காவ காக்க போயிடும். வானதி எமாந்து தேர்தலுக்கு பின் பாய பிராண்ட போவுது தெரியும். 0
0
Reply
Balamurugan - coimbatore,இந்தியா
30 மார்,2026 - 17:42 Report Abuse
அண்ணாமலை சட்டமன்றத்திற்குள் சென்று கர்ஜிக்க வேண்டும். 0
0
Reply
Balamurugan - coimbatore,இந்தியா
30 மார்,2026 - 17:41 Report Abuse
தமிழிசைக்கு சீட் தரக்கூடாது. 0
0
Reply
Balamurugan - coimbatore,இந்தியா
30 மார்,2026 - 17:40 Report Abuse
அண்ணாமலைக்கு சீட் தராவிட்டால் பிஜேபி நோட்டோவுக்கு செல்லும். 0
0
Reply
Vasan - ,இந்தியா
30 மார்,2026 - 17:40 Report Abuse
மைலாப்பூரில் உள்ள சாலைகள், குறிப்பாக மாட வீதிகள் அனைத்தும் மிக மிக அகலமானவை.
பிரதமரின் ரோடு ஷோ நடத்த வசதியாக இருக்கும். 0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement