ரூ.2,250 கோடி திரட்டும் 'ஆக்சிஸ் பைனான்ஸ்'

ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனமான 'ஆக்சிஸ் பைனான்ஸ்' 2,250 கோடி ரூபாய் மூலதனம் திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, 'கேதாரா கேபிட்டல்' நிறுவனத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் பங்குகளை ஒதுக்கி, 750 கோடி ரூபாயை திரட்டியுள்ளது.

ஏற்கனவே ஆக்சிஸ் வங்கி, ஆக்சிஸ் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 'ரைட்ஸ் இஸ்யூ' வாயிலாக 1,500 கோடி ரூபாய்க்கு பங்குகள் வாங்க முடிவு செய்து, இயக்குநர் குழு ஒப்புதலையும் பெற்றுள்ளது.

இந்த மூலதன உயர்வு, நிறுவனத்தின் நிதி நிலையை வலுப்படுத்துவதோடு, விரிவாக்கப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்லரை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும்மொத்த கடன் பிரிவுகளில் ஆக்சிஸ் பைனான்ஸ் இயங்கி வருகிறது.

Advertisement