தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி துருக்கியில் கைது
இஸ்தான்புல்: போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான சலீம் டோலா, 59, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கைது செய்யப்பட்டார்.
முக்கிய குற்றவாளி சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக கருதப்படும் சலீம் டோலா மீது நம் நாட்டில், போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், 10 வழக்குகள் உள்ளன.
குறிப்பாக, மஹாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 252 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.டி., எனப்படும் மெபெட்ரான் போதைப் பொருள் பிடிபட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி இவராவார்.
புலனாய்வு அமைப்புகளின் தரவுகளின்படி, ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான சர்வதேச செயற்கை போதைப் பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை டோலா நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
துபாயை மையமாக வைத்து தன் செயல் பாடுகளை ஒருங்கிணைத்து வந்த இவர், நிழல் உலக தாதா என அழைக்கப்படும் தாவூத் இப்ராஹிமின் 'டி - கம்பெனி'யுடன் நெருங்கிய தொடர்பில் இ ருந்ததாக கூறப்படுகிறது.
'ரெட் கார்னர்' நம் மத்திய புலானாய்வு அமைப்பின் கோரிக்கையின் பேரில், இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் விடுத்திருந்தது.
ஐ க்கி ய அரபு எமிரேட்சின் போலி அடையாள ஆவணங்களை பயன்படுத்தி, துருக்கியின் இஸ்தான்புல்லி ல் அவர் மறைந் து வாழ்ந்ததாக கூறப் படுகிறது.
இந்நிலையில், துருக்கி தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் சலீம் டோலா பிடிபட்டுள்ளார்.
தற்போது, சலீம் டோலா துருக்கி போலீசாரின் காவலில் உள்ளார்.
இந்தியாவுக்கும், துருக்கிக்கும் இடையே நேரடி நாடு கடத்தல் ஒப்பந்தம் இல்லாததால், அவர் வைத்திருக்கும் போலி யு.ஏ.இ., பாஸ்போர்ட் அடிப்படையில், ஐக்கிய அரபு எமிரேட்சின் உதவியுடன் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே, கடந்தாண்டு சலீம் டோலாவின் மகன் தாஹிர் டோலா மற்றும் அவரது உதவியாளர் சலீம் முகமது சோஹைல் ஷேக் ஆகியோர் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருட்டு கும்பலின் அயலக அணியும் இதுல இருக்கா என தமிழக போலிஸ் விசாரிக்குமா?
பாரதத்துக்கும் துருக்கிக்கும் இடையே EXTRADITION TREATY இல்லாததோடு மட்டுமின்றி - துருக்கி பாகிஸ்தானைப்போல் ஒரு ROGUE STATE ஆகும்.
பல INTERNATIONAL CRIMINALS க்கு துருக்கி புகலிடம் அளித்துவருவதும் உண்மை.
பாரதத்துக்கும் துருக்கிக்கும் இடையே அவ்வளவு நட்புறவு இல்லை.
UAE மனது வைத்து முழு முயற்சி செய்தால் - சலீம் டோலாவை பார்த்ததுக்கு கொண்டு வரமுடியும்.மேலும்
-
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: 43 சதவீதத்துடன் தமிழகம் முன்னிலை
-
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?
-
ராமநவமி உற்சவ விழா
-
என்.டி.ஏ., நடத்தும் நீட் தேர்வு போன்ற உணர்வை தந்தது: தினமலர் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்
-
ஓட்டுப்பதிவு ஓவர்: என்ன செய்கிறார்கள் நம் வேட்பாளர்கள்?
-
தேங்காய் எண்ணெய் விலை இப்போதைக்கு குறையாது: தேங்காய் உற்பத்தி குறைவே காரணம்