மேற்கு வங்கத்துக்குள் ஊடுருவியோர் மே 4க்கு பின் வெளியேற்றப்படுவர்: பிரதமர் மோடி எச்சரிக்கை
கொல்கட்டா: “மேற்கு வங்கத்தில், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 29ம் தேதிக்குள், ஊடுருவல்காரர்கள் அனை வரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், மே 4ம் தேதிக்கு பின் அனைவரும் வெளியேற்றப்படு வர்,” என, பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி செய்கிறது. இங்குள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
ஓட்டுப்பதிவு
இதன்படி, தமிழகத்துடன் சேர்த்து, 152 தொகுதிகளுக்கு, கடந்த 23ல் முதல் கட்டத் தேர்தல் நடந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக எஞ்சியுள்ள 142 தொகுதிகளுக்கும் வரும் 29ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைய உள்ளது.
இதையடுத்து, இறுதி கட்ட தேர்தல் பிர சாரம் சூடுபிடித்துள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள போங்கான் பகுதியில் பா.ஜ., சார்பில் நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., ஆட்சியின் கீழ் சாதாரண அரசியல்வாதிகள் முதல் ரவுடிகள் வரை அனைவரும் தங்களையே அரசு நிர்வாகம் போல் கருதி செயல் படுகின்றனர்.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான கொடுங்கோல் ஆட்சி, பெண்களை துன்புறுத்தும் ரவுடிகளுக்கே துணை நிற்கிறது. 'இனி மேல் இதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்' என, உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தும் சமூக விரோதிகள் அனைவரும், மே 4ம் தேதிக்குப் பின், மேற்கு வங்கத்தில் அமைய உள்ள புதிய பா.ஜ., அரசின் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவர்.
சந்தேஷ்காலியைச் சேர்ந்த ரேகா பாத்ரா மற்றும் ஆர்.ஜி.கர் மருத்துவமனை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் தாய் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ., வாய்ப்பளித்துள்ளதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எங்கள் நிலைப்பாட்டை நிரூபிப்பதாக உள்ளது.
சாதனை
வரும் சட்டசபைத் தேர்தலில், மேற்கு வங்க மக்கள் பா.ஜ.,விற்கு ஓட்டளித்தால், திரிணமுல் காங்.,கின் காட்டுத் தர்பாரில் இருந்து நான் உங்களுக்கு சுதந்திரம் அளிப்பேன்.
இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள 29ம் தேதிக்குள் ஊடுருவல்காரர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், மே 4ம் தேதிக்குபின் அனைவரும் வெளியேற்றப்படுவர்.
தேர்தலின் முதல் கட்டத்தில் 93 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பதிவாகி சாதனை படைத்ததன் மூலம் திரிணமுல் காங்.,யின் ஆணவம் தகர்க்கப்பட்டது; இரண்டாவது கட்டத் தேர்தல் இம்மாநிலத்தில் பா.ஜ.,வின் வெற்றியை உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நம் நாட்டிற்குள் நுழைந்து போலியாக ஆவணங்களை பெற்று வசிப்பவர்களை உறுதியாக இருந்து வெளியேற்றுங்கள். அதை உங்களை தவிர வேறு எவராலும் செய்ய முடியாது.
மேற்கு வங்கத்தில் 2021 ம் ஆண்டில், முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற 152 தொகுதிகளில் சுமார் 3.15 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். 2026 ஆம் ஆண்டில், அதே தொகுதிகளில் 3.35 கோடி வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். இது 20 லட்சம் (2 மில்லியன்) வாக்காளர்களின் அதிகரிப்பாகும். அதுவும், வாக்காளர் பட்டியலிலிருந்து 37 லட்சம் தகுதியற்ற பதிவுகள் நீக்கப்பட்ட பிறகும் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது... இது உண்மையிலேயே வியக்கத்தக்கது. எனவே தீதி மம்தாவிற்கு ஆப்பு கன்ஃபாம் என்று தெரிகிறது.
பாரதத்துக்குள் ""10 கோடி"" க்கும் மேல் பங்களாதேஷிகள் + ரோஹிங்யாக்கள் ஊடுருவியுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் POINT OF ENTRY - மேற்குவங்கம் தான் என்றாலும் 10 கோடி ஊடுருவிகளும் மேற்கு வங்காளத்தில் இல்லை,
10 கோடி பேரும் - பாரதம் முழுவதும் ஆங்காங்கே வேலைவாய்ப்பு உள்ள இடங்களில் பரவி உள்ளனர்.
இவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து - நாட்டை விட்டு வெளியேற்றுவது சாதாரண காரியம் இல்லை.
முழு முயற்சியுடன் ஈடுபட்டால் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் - அனைவரையும் வெளியேற்ற
கள்ள ஓட்டுப்போட இருந்த ஓரிரு தொழில்நுட்பங்களை மட்டும் கண்டுபிடித்து நிறுத்தி வைத்து இருக்கிறார்கள் - மீதம் இருப்பதை ஒன்றும் செய்ய முடியவில்லை.
now also you can do. still west Bengal is part of India, you have border security force
you can wait till May 4 . then we will throw you outமேலும்
-
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: 43 சதவீதத்துடன் தமிழகம் முன்னிலை
-
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?
-
ராமநவமி உற்சவ விழா
-
என்.டி.ஏ., நடத்தும் நீட் தேர்வு போன்ற உணர்வை தந்தது: தினமலர் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்
-
ஓட்டுப்பதிவு ஓவர்: என்ன செய்கிறார்கள் நம் வேட்பாளர்கள்?
-
தேங்காய் எண்ணெய் விலை இப்போதைக்கு குறையாது: தேங்காய் உற்பத்தி குறைவே காரணம்