சகோதரர், மைத்துனருக்கு கத்திக்குத்து ; வாலிபர் கைது 

கோவை: கோவை, சரவணம்பட்டி கரட்டுமேட்டை சேர்ந்தவர் வள்ளி. இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். விஸ்வாசபுரத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக, மூத்த மகன் சரவணன், 30, பழக்கடையை கவனித்து வந்தார். இந்நிலையில், தனக்கு வயது அதிகரிப்பதால், திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யுமாறு தாய் வள்ளியிடம் சரவணன் அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.

நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த சரவணனின் மைத்துனர் அசோக், சத்தம் போட்டார். இதனால், ஆத்திரமடைந்த சரவணன், அசோக்கை கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற மற்றொரு மகன் சதீஷிற்கும் சரமாரியாக கத்தி குத்து விழுந்தது. பின்னர் அங்கிருந்து சரவணன் தப்பினார். அவரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement