வாட்டர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

ரேஸ்கோர்ஸ்: வரும் சட்டசபைதேர்தலில் மாவட்டத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நுாதன முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் வாட்டர் கேன்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி துவங்கியது.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பவன்குமார் வாட்டர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி, வாகனப் பேரணியை துவக்கி வைத்தார்.

முன்னதாக, இதே பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் ஜாமாப் இசைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அதிகாரிகளும் பொதுமக்களும் பங்கேற்ற விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே உட்பட அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement