சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க தீர்மானம்

கடம்பத்துார்: கடம்பத்துாரில் நடந்த வட்டார நுகர்வோர் நலன் பாதுகாப்பு சங்க கூட்டத்தில், ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடம்பத்துார் தனியார் பள்ளியில், நேற்று முன்தினம் மாலை வட்டார நுகர்வோர் நலன் பாதுகாப்பு சங்க கூட்டம், தலைவர் சேகர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், 'கடம்பத்துார் ரயில்வே சுரங்கப்பாதையை துவக்கிய தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பின், ரயில் பயணியர் மற்றும் பகுதிமக்கள் நலன் கருதி, சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சுரங்கப்பாதை அருகில் டிக்கெட் கவுண்டர் அமைக்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைத்து, இருபுறமும் உள்ள மண் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement