சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் ஸ்டாலின் பயணிகளிடம் ஓட்டு சேகரித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, பயணிகளிடம் நலம் விசாரித்த ஸ்டாலின் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு அளித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். சிலர் அவருடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர். அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயணிகளுடன் கலந்துரையாடினார்.
சில தினங்களாக நடைபயிற்சியின் போது மக்களை சந்தித்தும், சாலையோர டீக்கடையில் மக்களோடு மக்களாக அமர்ந்து டீ குடித்தும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே இருப்பதால் அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.
@block_G@
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: Morning ride in Chennai Metro: சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் ஓட்டு சேகரித்தேன். மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.block_G
நம்ம ஆட்கள் தேர்தல் வந்தால் போதும் இடுகாடு, சுடுகாடு எல்லாம் போயி இறந்தவர்களையே கூட எழுப்பி ஓட்டு கேட்பார்கள் 20 நாள் கஷ்டப்பட்டால் 5 வருடம் ராஜமரியாதையுடன் வாழ்க்கை சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று அன்றே சொல்லியது உண்மைதான்
ரயிலில் முதல்வர் நடந்து போயிருப்பாரே
ஒழுங்கா அறிக்கை தயாரிச்சுக் கொடுக்காததால் கோவை மதுரை மெட்ரோ கிடப்பில் உள்ளது. நினைவுக்கு வருமா?
2021 க்கு பிறகு இந்துமத துரோக இந்துமத விரோத மானங்கெட்ட திமுக ஆட்சி அமைத்தப்பின் வாங்கிய கடன் எவ்வளவு அந்த கடனில் செயல்படுத்திய நலதிட்டங்கள் என்ன ஆட்டய போட்டது எவ்வளவு என தெளிவாக சொன்னீர்களா ஆட்டய போடவே பிறந்த திராவிட மாடல் தலிவரே
அவருக்கு பின்னால் நிற்க வேண்டும். அவருக்கு பக்கத்தில் நின்றால் பஸ்சில் அரை விழுத்தார் போல் விழுந்து விடும். ஜாக்கிரதை.
தேர்தல் நேரம் என்பதால் அவர் யாரையும் கன்னத்தில் அறையவில்லை... இதுவே தேர்தல் முடிந்திருந்தால் எல்லோரையும் இந்த .... அடித்திருப்பார்
சும்மா கேட்டுப் பாருங்க ஒருபயலும் டிக்கெட் எடுத்து இருக்க மாட்டானுங்க...திராவிடீய வளர்ப்பு அப்படி
Why this old man is trying all these stunts???
சுற்றி நிற்கும் பேடை பிள்ளைகள் சற்று ஜாக்கிரதையாய் இருக்கணும் பசங்க யாரும் பக்கத்துல போகாதீங்க, போனால் பொளேர் என்று அறை விழும்
தேர்தலுக்கு தேர்தல் படப்பிடிப்பு ஒரே மாதிரி இருக்கிறது.திண்ணையில் அமர்ந்தது புகார் பெட்டி. 100 நாட்களில் குறை தீர்ப்பது.. எல்லாம் ஒரே படம் தான்.. அப்புறம் வாக்குறுதிகளும் ஒரே மாதிரி இருக்கிறது...ஆனால் எதுவும் நிறைவேறவில்லை.. மக்களின் அடிப்படை உரிமையான சுதந்திரம் கூட கஞ்சா மற்றும் போதையால் கேள்விக்குறியாகி விட்டது.. விளம்பரப் படத்தில் நடிக்க வேண்டியவரை எல்லாம் முதல்வர் ஆக்கியதன் விளைவு..மனசாட்சி இல்லாமல் திரும்ப வர வேண்டும் என்றும் நினைக்கிறார்..மேலும்
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்