ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா

வில்லியனுார்: ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

ஊசுடேரி லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி வளாகத்தில் உள்ள ஜெகத்ரட்சகன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த விளையாட்டு விழாவிற்கு பள்ளி தாளாளர் சந்தான கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக அதிகாரி சங்கீதா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக சீனியர் மூமண்ட்லாஜி அகடமி நிர்வாகி டாக்டர்.செந்தில்குமார், அஸ்வின்குமார் மற்றும் பேஸ்கட் பால் நேஷ்னல் பிளையர் அச்சுதன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்தனர்.

முன்னதாக பள்ளி மாணவர்களை நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு அணி வீரர்களின் அணி வகுப்பு நடத்தி ஒலிம்பிக் ஜோதி ஏற்றி விளையாட்டு விழா துவங்கப்பட்டது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்தனர்.

Advertisement