தேர்தல் பயிற்சி வகுப்பில் 'ஆப்சென்ட்' :ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் :ஏப்.1, 4, 6ம் தேதிகளில் விசாரணை
மதுரை: மதுரை மாவட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 1666 ஆசிரியர்களுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணைக்குப் பின் அவர்களுக்கு மறுபயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
மாவட்ட தேர்தல் பணிகளில் பல்வேறு அரசு துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றுவோருக்கு 3 கட்ட பயிற்சி நடக்க உள்ளது. மார்ச் 28ல் முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்க 14 ஆயிரத்து 780 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலனோர் பள்ளி ஆசிரியர்கள்.
1666 பேர் 'ஆப்சென்ட்' ஆண்டு இறுதித்தேர்வு நெருங்கும் நிலையில் பல ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. 1666 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். இவர்களிடம் அந்தந்த தொகுதி கல்வித்துறை அலுவலகத்தில் ஏப்.1, 4, 6ம் தேதிகளில் விசாரணை நடக்க உள்ளது. ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு தனிப்பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதைதொடர்ந்து ஏப்.11ல் இரண்டாம் கட்ட பயிற்சி, ஏப்.20ல் விடுபட்டவர்களுக்கு பயிற்சி, ஏப்.22 ல் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.
தகுதியில் குழப்பம் உயர்பதவியில் உள்ளோர் ஓட்டுச்சாவடியில் கீழ்நிலை அலுவலராகவும், கீழ்நிலையில் உள்ளவர்கள் ஓட்டுச்சாவடி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்டம்' (ஐ.எப்.எச்.எம்.எஸ்.,) போர்ட்டலில் உள்ளபடி சம்பள அடிப்படையில் பட்டியல் பெற்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி புதிதாக நியமனம் பெற்ற அலுவலர் குறைந்த சம்பளத்தில் இருப்பார். பணிமூப்பு அடிப்படையில் மற்றொரு ஊழியர் கூடுதல் சம்பளம் பெறுவார். இதனால் ஏற்பட்ட குழப்பமே இதற்கு காரணம். இதை சரிசெய்ய அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.
மேலும்
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2720 அதிகரிப்பு
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு