அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு நிறுத்திவைத்தது அமெரிக்கா. இந்த போர் நிறுத்தத்திற்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சுமுகமாக நடைபெற்றால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இருவாரங்களுக்கு போர்நிறுத்தம் என டிரம்ப் அறிவித்தார். பேச்சுவார்த்தைகளுக்காக ஈரான் முன்வைத்த 10 கோரிக்கைகளை அமெரிக்க அதிபர்
அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.
ஈரானும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், நமது சக்திவாய்ந்த ஆயுதப் படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திவிடும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.
அவர், ''ஈரான் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமும், தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இரண்டு வாரங்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும், என்றார்.
இடைக்கால போர் நிறுத்தம் செய்ய உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ள நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதி பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 10ம் தேதி இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது.
@block_P@
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக, 109 டாலரில் தொடங்கிய ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 91 டாலர்கள் வரை சரிந்தது. கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.block_P
இப்பவாவது சில்லறை வியாபாரிகள் பொருளோட price ஐ கம்மி பண்ணுவாங்களா?
இப்படியும் படிக்கலாம் தமிழக புதுச்சேரி தேர்தல் முனிட்டு ரெண்டு வாரம் போர் நிறுத்தம்
தங்களுடைய சொந்த நாட்டு நலனுக்காக உலகையே அச்சுறுத்தி வருகிறார்கள். போரில்லா நல்லுலகம் படைக்க அனைத்து நாடுகளும் ஒன்றினைய வேண்டும்.
trump war தற்காலிக நிறுத்தம். ஒரு தனிமனிதனின் விறுப்பு விருப்புகள் உலகையே தலை கீழாக புரட்டி போடும் என்பதற்கு உதாரணம்.
எல்லாம் புகழும் இறைவனுக்கே இறைவனுக்கு நன்றி விரைவில் நிரந்தர போர் நிறுத்தம் வந்து மக்கள் நிம்மதி அடைய வழி வகுக்க வேண்டும்மேலும்
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை
-
உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் இறுதி பிரசாரம்