தொகுதி மறுவரையறை ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: தொகுதி மறுவரையறை ஆபத்து: இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதா? தென்றலாக இருக்கும் தெற்கை கடும் புயலாக மாற்றி விடாதீர்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தொகுதி மறுவரையறை எப்படி நடக்கும் என கூறாமல் மத்திய பாஜ அரசு இதுவரை ரகசியம் காப்பது ஏன்? தொகுதி மறுவரையறை ஆபத்து: இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதா? தென்றலாக இருக்கும் தெற்கை கடும் புயலாக மாற்றி விடாதீர்கள். மக்கள் எழுப்பியுள்ள நியாயமான கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்.
2001ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொகுதி மறுவரையறையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தது போலவே, தற்போதைய பிரதமர் மோடியும் அதேபோன்று செய்ய வேண்டும் என்று தென் மாநிலங்கள் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைக்கு அவரது பதில் என்ன?
ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தொடரை அவசரமாகக் கூட்டுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29க்குப் பிறகே கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைத்த நியாயமான கருத்தைப் புறக்கணிப்பதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
கலந்தாலோசனைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமலேயே, மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிப்பது, சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு இல்லையென்றால் வேறு என்ன?
எங்களோடு பேசாமல் எந்த முடிவு எடுத்தாலும் உயிரே போனாலும் உடன்பட மாட்டோம். தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, வடக்குப் பகுதிக்கு அதிக அதிகாரங்களைக் குவிக்கும் மத்திய பாஜ அரசின் நடவடிக்கைகளை திமுக வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம், எங்களின் ஒப்புதல் இல்லாமலும், எங்களிடம் கலந்தாலோசிக்காமலும் இது தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும், அதற்கு எத்தகைய விலை கொடுக்க நேர்ந்தாலும் நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் நியாயமான தொகுதி மறுவரையறையைக் கோருகிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்ல இந்த இந்துமத விரோத இந்துமத துரோக மானங்கெட்ட திமுகவை தடைசெய்ய வேண்டும் தேசத்திற்கு எதிராக இருக்கிற இந்த மானங்கெட்ட திமுகவை உடனடியாக தடைசெய்ய வேண்டும்
ஒன்றியத்தைக் காட்டி இன்னும் எத்தனை தலைமுறைகளைப் பயமுறுத்தி, ஏமாத்தி ஓட்டுவாங்க முடியும் ????
இப்படி ஏதாவது சொல்லி மக்களை பயமுறுத்தி இவர்தான்மக்களையெல்லாம் பெரிய ஆபத்திலிருந்து காப்பதைப்போல மக்களை சிந்திக்கவிடாமல் வைத்திருந்தால் தான் நாட்டைகளவாடும் எண்ணங்கள் நன்றாகவே நிறைவேறும் .அரசியல் அமைப்பு சட்டத்திலேயே மக்கள்மன்றம் எண்ணிக்கை குறைக்கக்கூடாது என்று இருகின்றது .இதை திரித்து மக்களுக்கு பொய்ச்சொல்வதென்? மக்கள் எண்ணிக்கை கூடும்போது பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் கூடும் .மக்கள் தங்களுடைய அறியாமையிலிருந்து மீளும்வரை இவர்களுக்கு கொண்டாட்டம்தான் .அதற்காகத்தான் சாராயத்தை ஊற்றி மக்களின் வாரிசுகளை பள்ளிக்கு செல்லாமலேயே வைத்திருக்கின்றார்கள் .மக்கள் விழிக்கணும் .
ஜாஸ்தி ஆனால் என்ன கம்மியானால் என்ன, எப்படியும் மக்கள் மீண்டும் தவறு செய்ய மாட்டார்கள்
நமக்கு நியாயம்னா அது நாட்டுக்கு கேடான விசயமாத்தான் இருக்கும் .. ஏன்னா கழக DNA அப்டி
தொகுதி மறுவரையரை ஆபத்து .. ஹா ஹா யாருக்கு? கொள்ளை அடிப்பவனுவலுக்கு
டோப்பா தலீவருக்கு கவலையை பாருங்கடோய். டமில் நாட்டை குத்தகைக்கு எடுத்துட்டோம்ன்னு ஒரு மமதை மண்டையில் இருக்குது. அதன் வெளிப்பாடு தான் இது.டோப்பா தலயரே நீங்க பயந்து நடுங்கும் விஷயத்தை அடுத்த ஆட்சிக்கு வருபவனுங்க பாத்துகட்டும் நீங்க பத்திரமா மூட்டை கட்டுற வைலையை பாருங்க. நீங்க கட்டுற மூட்டை உங்களுக்கு கிடைக்குமான்னு உங்களுக்கு தெரியுமா?
ஏப்ரல் 29 க்குப்பிறகு வைத்துக்கொண்டாலும் அந்த 40 கவைக்குதவாத பாராளுமன்ற அங்கத்தினர்கள் கூச்சல் போடுவார்கள் இல்லையென்றால் கேன்டீனுக்குப்போவார்கள். ஆக்க பூர்வமாக எதுவும் செய்யப் போவதில்லை
மாதேஷ்ன்னு ஒரு மானஸ்தன் இருப்பான் அவர் எங்கே. தன சொந்த மாவட்டதிற்கு அருகிலிருக்கும் கர்நாடகாவுக்கு ஓட்டிட்டாரா ?
வெத்து வெட்டு என்பதை தினமும் பறை சாற்றுகிறார்மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை