ஆம்னி பஸ்கள் பதிவுக்கு இழுத்தடிக்கும் அதிகாரிகள் உரிமையாளர்கள் புகார்
சென்னை: 'தமிழகத்தில் ஆம்னி பஸ்களை பதிவு செய்ய, ஒரு மாதம் வரை இழுத்தடிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல், ஒரே நாளில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, அந்த சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறியதாவது:
எங்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், ஆம்னி பஸ் தொழிலின் தற்போதைய நிலை, எதிர்கால வளர்ச்சி, தொழிலில் நிலவும் சவால்கள், அரசின் கொள்கைகள் உட்பட, பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பேசினோம்.
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், ஆம்னி பஸ்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும். ஆம்னி பஸ்களுக்கு தனி 'பர்மிட்' வழங்க வேண்டும்.
அனைத்து அபராதங்களும், 'ஆன்லைனில்' மட்டுமே செலுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்.
மின் வாகனங்களுக்கான வரி சலுகையை, வரும் 2030 வரை நீட்டிக்க வேண்டும் உட்பட, ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் ஆம்னி பஸ்களை பதிவு செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது.
பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடிக்கின்றனர். இதனால், பஸ் சேவையை துவங்குவதில் வாரக்கணக்கில் தாமதம் ஏற்படுகிறது.
மற்ற மாநிலங்களில், ஒரே நாளில் ஆம்னி பஸ்களை பதிவு செய்கின்றனர். இந்த முறையை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வேல் ரிட்டன்... புத்தருக்கு ஓகே...: உதயநிதியின் 'மதசார்பின்மை'
-
கோவையில் காணாமல் போன 'காம்ரேடுகள்'!
-
இன்னும் தேர்தலுக்கு 18 நாட்கள் தான்; அனல் பறக்கும் தினமலர் தேர்தல் களம்!
-
அமித் ஷாவின் நம்பிக்கை மேற்கு வங்கத்தில் கரையேறுமா?
-
விழுப்புரம் மாவட்டத்தில் 88 பேர் மனு தாக்கல்
-
வானுார் தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் மனு தாக்கல்