விழுப்புரம் மாவட்டத்தில் 88 பேர் மனு தாக்கல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 3 நாட்களில் 88 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும், முதல் நாளான 30ம் தேதி 20 பேர் மனு தாக்கல் செய்தனர்.
விடுமுறை முடிந்து இரண்டாவது நாளாக 2ம் தேதி மனு தாக்கல் நடந்தது. அதில் 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 3வது நாளாக நேற்று வேட்பு மனு தாக்கல் நடந்தது.
இதில், செஞ்சி தொகுதியில் 9 பேர், மயிலத்தில் 11 பேர், திண்டிவனம் (தனி) தொகுதியில் 5 பேர், வானுார்(தனி) தொகுதியில் 6 பேர், விழுப்புரத்தில் 8 பேர், விக்கிரவாண்டியில் 7 பேர், திருக்கோவிலுாரில் 5 பேர் என, மொத்தம் 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை மூன்று நாள்கள் நடந்த வேட்பு மனு தாக்கலில், தி.மு.க., - தே.மு.தி.க., - த.வெ.க., - நா.த.க., மற்றும் சுயேச்சைகள் என 88 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.