டீசல் விலை லிட்டர் ரூ.92.40

சென்னை: 'முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் சில்லரை விற்பனை விலை, டீசல் லிட்டருக்கு, 92.40 ரூபாயாக உள்ளது' என, தமிழக பெட்ரோலிய டீலர்கள் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

இம்மாத நிலவப்பரடி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பங்க்குகளில், சில்லரை விற்பனை விலையாக, லிட்டர் டீசல், 92.40 ரூபாயாக உள்ளது. தொழில் துறை மற்றும் நுகர்வோர் பயன்பாட்டிற்கான டீசல் விலை, 141.83 ரூபாயாக உள்ளது.

'நயாரா' நிறுவனத்தின் லிட்டர் டீசல் விலை, 95.54 ரூபாய். 'ஷெல்' நிறுவனத்தின் டீசல் விலை, 124.66 ரூபாய்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement