தனியார் நிறுவன ஊழியர் சாலை விபத்தில் பலி
மைசூரு: சரக்கு ஆட்டோ மோதியதில், பைக்கில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
மைசூரு டவுனில் வசித்தவர் ராகவேந்திரா, 38. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் காலை, நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரா கோவிலுக்கு பைக்கில் சென்றார். சாமி தரிசனம் முடிந்ததும், ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
வருணா அருகே வந்த போது, வேகமாக வந்த சரக்கு ஆட்டோ, பைக் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட ராகவேந்திரா, தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தார். சரக்கு ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பினார். அவரை, வருணா ரூரல் போலீசார் தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement