கார் உரிமையாளர் கொலை: கூலித் தொழிலாளிக்கு ஆயுள்
ஸ்ரீவில்லிபுத்துார்;சாத்தூர் என்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், சொந்தமாக கார், டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார். 2023 ஆக. 31 இரவு அதே ஊரைச் சேர்ந்த கண்ணன், கண்ணன், ஆசிர்வாதம், சுந்தரபாண்டி, பால்பாண்டி, ராஜபாண்டி, கண்ணன், சின்னப்பாண்டி ஆகிய 8 பேர் முன் விரோதம் காரணமாக சதீஷ்குமாரிடம் தகராறு செய்துள்ளனர். இதில் கண்ணன் 24 , கத்தியால் குத்தி சதீஷ்குமாரை கொலை செய்துள்ளார்.
இருக்கன்குடி போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் கண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மற்றவர்களை விடுதலை செய்தும் நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க., ஆட்சி மலரும்: புவனேந்திரன் நம்பிக்கை
-
புவனகிரியில் 12 மனுக்கள் தள்ளுபடி
-
புதிய வாக்காளர்கள் ஓட்டு யாருக்கு? அரசியல் கட்சிகள் குழப்பம்
-
நேரடி அதிகாரி உத்தரவை பின்பற்றுங்கள்: டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவு
-
100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிசெய்ய நடவடிக்கை
-
பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் திறந்த வேனில் பிரசாரம்
Advertisement
Advertisement